August 30, 2016

பிள்ளையானின் சகா பிரசாந்தனுக்கு பிணை வழங்க மட்டு.மேல்நீதிமன்றம் அனுமதி!

இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் பூ.ஹரனுக்கும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் இன்று பிணை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனையிறவில் போருக்குப் பின் மீண்டும் உப்பு அறுவடை ஆரம்பம்!

ஆனையிறவு உப்பளத்தில் இறுதிக்கட்டப் போருக்குப் பின்னர் இன்று மீண்டும் உப்பு அறுவடை செய்யப்பட்டுள்ளது. ஆனையிறவு உப்பளத்திற்கான அலுவலக கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் ஆனையிறவு உப்பளத்தின் இயந்திர இயக்குநர்கள் மற்றும் சிற்றூழியர்களுக்கான நியமனக் கடிதங்களும் இன்று வழங்கப்பட்டன.

வட மாகாண முதலமைச்சருடன் உலக வங்கி அதிகாரிகள் சந்திப்பு!

உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கு பொறுப்பான பதில் பொறுப்பதிகாரி அன்ற்மாரி டில்ஷன் தலமையிலான அதிகாரிகள் குழு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை இன்று யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியது.

நான் பலமற்றவர் அல்ல கண்ணா - மைத்திரியை எச்சரிக்கும் மஹிந்த!

அரசியல் ரீதியாக பழிவாங்கும் அளவிற்கு தான் பலமற்றவர் அல்ல என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். களுத்துறை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டிருந்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புலிகள் மீது பழிபோட்டு ஈபிடிபி நடத்திய படுகொலைகள்! - இரகசியங்களை அவிழ்த்து விட்டார் ஈபிடிபி மூத்த உறுப்பினர் !

ஊடகவியலாளர்கள் நிமலராஜன், நடராஜா அற்புதராஜா, கே.எஸ்.ராஜா மற்றும் சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம் உள்ளிட்டோரை ஈபிடிபியினரே படுகொலை செய்ததாகவும், படையினருடன் இணைந்து இதுபோன்ற கொலைகள், ஆட்கடத்தல்களில் ஈபிடிபி ஈடுபட்டதாகவும் அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர் சு.பொன்னையா தகவல்களை வெளியிட்டுள்ளார்.

August 29, 2016

வவுனியா நகரசபைக்கு தமிழர் அல்லாத ஒருவரை செயலாளராக நியமிக்க முயற்சி! சிவமோகன் எம்.பியும் துணைபோகின்றாரா?

வவுனியா நகரசபைக்கு தமிழர் அல்லாத ஒருவரை செயலாளராக நியமிக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தெரியவருகிறது.

இலங்கை தமிழர்களிடம் மன்னிப்பு கேட்டார் சேரன்!

அன்பு இலங்கைத்தமிழ் சகோதரர்கள்அனைவருக்கும் வணக்கம்…

முதலில் இவ்வளவு காலம் என்னை சகோதரனாக ஏற்றமைக்கு ( எனக்கு எந்த தகுதியும் இல்லாமல்) நன்றி… நீங்களும் இன்னும் சில பல சகோதரர்களும் இங்கு விமர்சனம் என்ற பெயரில் என்னைப்புகழ்ந்த எல்லா வார்த்தைகளையும் மனமாற ஏற்றுக்கொள்கிறேன்..

தோண்டத் தோண்ட கிடைக்கும் துப்பாக்கி பாகங்கள் : அதிர்ச்சியில் வவுனியா!

வவுனியா-ஓமந்தை, இறம்பைக்குளம் பகுதியில் எல்.எம்.ஜி துப்பாக்கி பாகங்கள் 38 மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்குமார இன்று தெரிவித்துள்ளார்.

தொடரும் விளக்கமறியல்: வித்தியா வழக்கின் முடிவுதான் என்ன?

புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சந்தேகநபரின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன் கொழும்பு துறைமுகத்தில் பாரிய தீ விபத்து - சுற்றிலும் புகைமண்டலம்!

கொழும்பு துறைமுகத்தில் சற்றுமுன்னர் பாரிய தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவம் ஒதுங்கியிருக்கவேண்டும் மக்களுடன் இணைந்தால் பிரச்சினை ஏற்படும் - சீ.வி.விக்னேஷ்வரன்

தமிழ் மக்களுக்கு உண்டாக்கிய பாதிப்புகளுக்கான நஷ்டஈடாகவே, இராணுவம் தமிழ் மக்களுக்கு செய்கின்ற நன்மைகளை நாங்கள் பார்ப்போம். அதனை தாண்டி இராணுவம் தமிழ் மக்களுக்கு சேவை செய்கின்றது.

இலங்கை எல்லைக்குள் பிரவேசித்த மர்ம விமானம்!!! புலிகளுடையதா?

இலங்கை எல்லைக்குள் மர்மமான முறையில் பிரவேசித்ததாக கூறப்பட்ட அமெரிக்க விமானம் தொடர்பில் இலங்கை விமானப் படை தகவல் வெளியிட்டுள்ளது.

மாயமான மாணவன்- தேடுதல் வேட்டையின் பின்னர் சடலமாக மீட்பு!

மொறட்டுவை- அங்குலானை பிரதேசத்தில் தேவாலயத்திற்கு பின்புறம் உள்ள கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த 15 வயதான மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தன்னைக் கெடுக்க முற்பட்ட மருமகன் சத்தியசீலனை துரத்தித் துரத்தி வெட்டிய மாமியார் !! திருகோணமலையில் சம்பவம்!!

திருகோணமலை-புல்மோட்டை சுனாமி வீட்டுத்திட்டப்பகுதியில் மாமியாரின் கத்தி வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அவரது மருமகன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருணாவை தூக்கிலிடுங்கள்!! எனது உறவுகளை அவரே கொன்றார்!

“எனது மனைவி, பிள்ளைகள், உறவினர்களைப் படுகொலைசெய்த கருணா அம்மானை உடன் கைது செய்யுங்கள். எமது குடும்பத்தை அழித்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கினாலே எனது ஆத்மா சாந்தியடையும்.”

பருத்தித்துறை கடலுக்குள் பாணுடன் பாய்ந்தது முச்சக்கர வண்டி!

பருத்தித்துறை சுப்பர்மட கடலுக்குள் பாணுடன் பாய்ந்தது முச்சக்கர வண்டி பாண் விற்பனை செய்துவரும் முச்சக்கர வண்டி ஒன்று அதி வேகமாகச் சென்றதில் பருத்தித்துறை சுப்பர்மடம் கடலுக்குள் கவிழ்ந்துள்ளது.

வவுனியாவில் 3 கிலோகிராம் எடை கொண்ட கிளைமோர் மீட்பு!

வவுனியா ஆசிகுளம், மயிலங்குளம் பகுதியில் 3 கிலோகிராம் எடை கொண்ட கிளைமோர் ஒன்றும் இரு கைக்குண்டுகளும் வவுனியா பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“இலங்கை தமிழர்களுக்காக போராடியது அருவருப்பாக உள்ளது” சேரனின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து சீமான் என்ன சொல்கிறார்?

“இலங்கை தமிழர்களுக்கு போராடியதை நினைக்கும்போது அருவருப்பாக உள்ளது” என்ற இயக்குனர் சேரனின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இயக்குனருமான சீமான் என்ன சொல்கின்றார்…

மேலும் 10 கோடி ரூபாவை விழுங்கப் போகும் எம்.பிக்களின் தொலைபேசி கட்டணம்!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொலைபேசி கட்டணம் 10 கோடி ரூபாவினால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு தொலைபேசிகளுக்கான கட்டணம் இதுவரை காலமும் அரசினாலேயே செலுத்தப்பட்டு வந்தது.

ஒலிம்பிக்கில் பங்கேற்ற 9 வீரர்களுடன் 46 அதிகாரிகள் ரியோ பயணம்! - விசாரணைக்கு உத்தரவு !

அண்மையில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையின் சார்பில் 9 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.

நல்லூரில் வெளிவிவகார அமைச்சின் நடமாடும் சேவை! - மங்கள சமரவீர ஆரம்பித்து வைத்தார் !

வெளிவிவகார அமைச்சின் ஏற்பாட்டில், நல்லூர் ஆலயத்திற்கு முன்புறமாக பருத்துத்துறை வீதியில் கொன்சுலர் பிரிவினரால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு நடமாடும் சேவை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால், நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ரணிலுடன் பேசியது என்ன? - கூட்டமைப்பு அறிக்கை !

வடக்கில் இடம்பெற்று வரும் சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் புத்தர் சிலைகள் அமைக்கப்படுவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும்,

சுதந்திரக் கட்சி தலைவர் பதவி என்னிடம் இருந்து பறிக்கப்பட்டது! - வெதும்புகிறார் மஹிந்த !

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி தன்னிடம் இருந்து பறிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு வரையில் தாம் கட்சியின் தலைவராக கடமையாற்றியதாகவும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவியதன் பின்னர், மைத்திரிபால சிறிசேன தமது பதவியை பறித்துக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினருக்கு நன்றிக்கடன் பட்டவர்களாம் தமிழர்கள்! - கூறுகிறார் மங்கள !

வடமாகாணத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என கேட்பவர்கள், படையினர் செய்த நல்ல விடயங்களை மனதில் வைத்து நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

நம்பகமான- சர்வதேச விசாரணையை வலியுறுத்தி லண்டனில் பாரிய கவனயீர்ப்புப் போராட்டம்!

காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு காணாமல்போனோர் மற்றும் முன்னாள் போராளிகள் உயிரிழப்பு குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு பிரித்தானியா, அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.

August 28, 2016

யாழில் தலைதூக்கும் போதைப்பொருள் கலாச்சாரம்!!

கல்விக்கும் கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்ற யாழ் குடாநாட்டிலே இன்றைய களநிலவரங்கள் திசைமாறிய சமுதாயத்தின் அடையாளமாக உருவெடுத்துக் கொண்டு இருக்கின்றது.

ஓமந்தை சோதனை நிலையம் அமைந்துள்ள காணியை மீட்டுத்தாருங்கள்!

வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள சோதனை நிலையம் அமைந்துள்ள காணியை மீட்டுத்தாருங்கள் என உரிமையாளர்களில் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆறுவருடங்களாக தற்காலிக வீடுகளில் அவஸ்தையுறும் மாற்றுத்திறனாளிகள்!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் உதவி வீடுகள் அரசாங்கத்தின் தெரிவு ஊடாக வழங்கும் நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

புலிகளுக்கு ஆயுதம் வழங்கி இந்திய படையினரை கொன்றது காங்கிரஸ்!

காங்கிரஸ் ஆட்சி அமைத்திருந்த போது விடுதலைபுலிகளுக்கு ஆயுதங்களையும், வெடி பொருட்களையும் வழங்கியதாகவும் இந்திய இராணுவ படைத்தரப்பினரையும் வழங்கி புலிகளுக்கு உதவும் வகையில் செயற்பட்டிருந்தது என பாரதிய ஜனதா கட்சி குற்றம் சுமத்தியுள்ளார்.

விடுதலை புலிகளில் தொழில் நுட்பம் இலங்கை இராணுவம் வசம்?

இலங்கை இராணுவத்தினர், அடுத்தவாரம் முப்படையினரையும் உள்ளடக்கிய பெரும் போர்ப் பயிற்சி ஒன்றில் ஈடுபட உள்ளனர். எதிர்வரும் 3ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை “நீர்க்காகம்” எனும் பெயரில் கொக்கிளாய் பகுதியில் போர்ப் பயிற்சி இடம் பெற உள்ளது.

செட்டிகுளம் கப்பாச்சி கிராமத்தில் குடிநீரின்றி மக்கள் அவலம்!

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கப்பாச்சி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு காணப்படுவதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

நில மீட்புக்கான போராட்டத்தில் உயிரை விடவும் தயாராகும் மக்கள் : மயிலிட்டி பகுதி மீள கையளிக்கப்படுமா?

எங்களுக்கு மாற்றுக் காணி, வீடு உள்ளிட்ட அரசாங்கத்தின் எந்த உதவியும் வேண்டாம். எங்கள் சொந்த நிலங்கள் மட்டுமே வேண்டும். எங்கள் நிலங்களை விடுவிக்கும்வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.

அல் கய்தா தீவிரவாதிகள் இலங்கையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ள முயற்சி?

அல் கய்தா தீவிரவாதிகள் இலங்கையில் தமது இயக்கத்திற்காக ஆட்களை சேர்க்க முயற்சிப்பதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

20 பொதுமக்களைப் பலி கொண்டு தொடங்கிய சம்பூர் சமர்! கிழக்கில் யுத்தம் வெடித்த நாட்கள்!!

ஓகஸ்ட் 28. 2016, கிழக்கில் யுத்தம் மூண்ட நாட்கள். 20 பொதுமக்களை பலிகொண்டபடி சம்பூர் மீது இலங்கை அரச படைகள் தாக்குதல்களை தொடங்கின.

தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்! - ஜனாதிபதிக்கு விக்கி கடிதம்!

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அவர் அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது-

இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பான் கீ மூனுக்கு காட்டப் போகிறாராம் மங்கள!

இரண்டு நாள் பயணமாக இம்மாதம் 31ம் திகதி கொழும்பு வரும் ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூன் இலங்கைக்குள் ஏற்பட்டிருக்கும் பாரிய மாற்றங்களை அவருடைய கண்களாலேயே காண முடியும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அரசியல்கைதிகளின் விடுதலை குறித்து புதன்கிழமைக்கு முன் முக்கிய அறிவிப்பு!

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு தொகையினரை விடுவிப்பது குறித்து எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னதாக அரசாங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

வடக்கு மாகாணசபை உறுப்பினருக்கு எதிராக யாழ். முஸ்லிம்கள் போராட்டம்!

வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் தன்னிச்சையான செயற்பாட்டை கண்டித்து யாழ். முஸ்லிம்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர்.

August 27, 2016

விக்னேஸ்வரனின் ஆதரவு இல்லாமல் நன்மையில்லை...! தமிழ்த் தலைமைகளும் மறந்தனவோ?

முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது அரசாங்கம் அதிருப்தி கொண்டிருக்கின்றது. அவர் மீது ஏன் இவ்வளவுக்கு அரசாங்கமும், வடக்கு ஆளுநரும் கொதிப்பில் இருக்கின்றார்கள் என்பதற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே கிடைத்திருக்கின்றது.

காணாமால் போனவர்களுக்காக குரல் கொடுப்போம்! பிரித்தானியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

காணாமால் போனவர்களுக்கான அனைத்துலக நாளினை முன்னிட்டு பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஜெனீவாவில் முறைப்பாடு!

வட மாகாணத்தில் புத்தர் சிலைகளை அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது.

முதியவர்களின் இறுதிநாட்கள் இருள்சூழ்ந்த சுடுகாடாக மாறுவது எவ்வாறு?

அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்று பெற்றோரை தெய்வமாக வழிபட்டது ஒரு காலம். ஆனால் இன்று நவீனமான உலகிலே நாகரீகமான மனிதர்களோ அன்னையும் பிதாவும் பின்னுக்கு இடைஞ்சல் என்ற வாசகத்தை நெஞ்சங்களிலே வரைந்து வைத்துள்ளனர்.

கடல் தாண்டியும் மஹிந்தவின் சர்வதிகாரம்! ராஜபக்ஷ - பெக்கரின் சூழ்ச்சிக்குள் சிக்குவாரா மைத்திரி?

ஊழல், மோசடிகளுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எடுத்து வரும் நடவடிக்கையால் ராஜபக்ஷ ரெஜிமென்ட் ஆட்டம் கண்டு வருகிறது.

பிரபாகரனை கண்டுபிடிக்க வேண்டும் என முறைப்பாடு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை காணவில்லை என முறைப்பாடு செய்ய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிங்களவர்களுக்கு எதிராக த.தே.கூ முன்னெடுக்கும் இனவாதம் குறித்து விசாரணை நடாத்துமாறு கோரிக்கை!

இனவாத மற்றும் பிரிவினைவாதம் அடிப்படையில் வடக்கு-கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உதவியுடன் புத்தர் சிலைகள் கட்டுவதற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பிரபல போதைபொருள் விற்பனையாளர்கள் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மிக நீண்ட நாட்களாக போதைவஸ்து மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த இருவர் வெவ்வேறு இடங்களில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை நினைவுகூரும் தினம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை நினைவுகூரும் தினத்தை ஒட்டிய திருகோணமலை மாவட்டத்திற்கான நிகழ்வு இன்று காலை 11.30 மணியளவில் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

யாழ். ஒற்றுமையினை சீரழிக்காதீர்கள் அரசியல் வாதிகளே!

யாழ். மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தக் கோரியும், இன்று யாழ். பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடாத்தப்படும் யாழ். கிளிநொச்சி முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கான கூட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும் இன்று முற்பகல் யாழ். மாவட்ட முஸ்லிம் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீன்பிடிக்கச் சென்றவரின் வலையில் சிக்கிய துப்பாக்கிகள்!

திருகோணமலை - புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தென்னைமரவாடி பகுதியின் கலப்புக் கடலில் மீன் பீடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் வலையில் இரண்டு துப்பாக்கிகள் சிக்கி உள்ளதாக புல்மோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் இரகசியமான முறையில் அமெரிக்க விமானம் தரையிறங்கியதா?

அண்மையில் அமெரிக்கா விமானம் ஒன்று இரகசியமான முறையில் இலங்கையில் தரையிறங்கியிருந்தாக செய்தி வெளியாகியிருந்தன.