August 27, 2016

சிங்களவர்களுக்கு எதிராக த.தே.கூ முன்னெடுக்கும் இனவாதம் குறித்து விசாரணை நடாத்துமாறு கோரிக்கை!

இனவாத மற்றும் பிரிவினைவாதம் அடிப்படையில் வடக்கு-கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உதவியுடன் புத்தர் சிலைகள் கட்டுவதற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.


இதற்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்குமாறு ஜாதிக்க ஹெல உறுமய கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பௌத்த வனக்கஸ்தலங்கள் கட்டுவதற்கு எதிராக இடம் பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜனாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளரும், ஊடக பேச்சாளருமான நிஸாந்த ஸ்ரீ வர்னசிங்க தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பெருமளவான கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்டப்பட்டு வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு- கிழக்கு பகுதிகளில் சிங்களவர்களின் உரிமையையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

ஆனால் தற்போது அரசாங்கம் வடக்கு-கிழக்கு பகுதிகளின் வளர்ச்சி தொடர்பில் திட்டங்கள் முன்னெடுத்த வருவதாகவும் நிஸாந்த ஸ்ரீ வர்னசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் சிங்களம் பேசும் மக்கள் வட-கிழக்கில் நிராகரிக்கப்படுகின்றனர். வட-கிழக்கில் தமிழ் மக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் சிங்களவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என நிஸாந்த தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் இனவாத பிரிவினைவாத விடயங்கள் இன்னும் மாறவில்லை என நிஸாந்த குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment