பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சேறுபூசும் அரசியல் செய்பவர் அல்ல. அவர் நாகரிகமாகத்தான் அரசியல் செய்கிறார். ஆனால் என்னுடன் இருந்தவர்கள்தான் இப்பொழுது சேறுபூசும் அரசியலை செய்து வருகிறார்கள்
என நொந்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. சிங்கள நாளேடொன்றுடனான தொலைபேசி உரையாடலின் போதே மஹிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘சேறு பூசும் செயற்பாடுகள் முடிவின்றி முன்னெடுக்கப்படுகின்றன. முழு குடும்பம் மீதும் சேறு பூசுகின்றனர். இன்று ஊடகங்களில் பிரதான காட்டூன் படமாக நானே காணப்படுகின்றேன். அதனை பார்த்து நான் சிரிப்பேன். ஆனால் ஊடகங்கள் எப்போதும் எம்முடனேயே இருக்கும்.
என்ன புதுமையென்றால் என் வீட்டில் என்னுடன் இருந்த மற்றும் வீட்டு தென்னை மரத்தில் இளநீர் பறித்து குடித்தவர்கள் கூட இன்று எனக்கு எதிராக செயற்படுகின்றனர். அதனை என்னி நான் கோவப்பட போவதில்லை.சமூகத்தின் மாதிரி அப்படித்தான். எவ்வாறாயினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சேறு பூசும் அரசியல் கிடையாது’ என மஹிந்த அந்த தொலைபேசி உரையாடலில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment