September 2, 2016

இரண்டாவது நாளாகப் தொடரும் பரவிப்பாஞ்சான் மக்களின் போராட்டம்!

இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை முழுமையாக விடுவிக்குமாறு வலியுறுத்தி, கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் நேற்று மீண்டும் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்தது.


 
தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இப்பிரதேச மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்திருந்த நிலையில் ஏற்கனவே சுமார் 4 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. அதனையடுத்து கடந்த 13ஆம் திகதிமுதல் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வந்த மக்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், இதற்கு உரிய தீர்வை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்திருந்தார்.

எனினும், நேற்று மூன்றரை ஏக்கர் காணியே விடுவிக்கப்பட்டது. மேலும் சுமார் 10 ஏக்கர் அளவிலான காணி இராணுவத்தினரின் பிடியில் உள்ள நிலையில், குறித்த காணிகளை முழுமையாக விடுவிக்குமாறு கோரி பரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் இப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.




No comments:

Post a Comment