June 30, 2015

யாழ். கச்சேரியில் மீள்குடியேற்ற கூட்டம்: ஊடகவியலாளருக்கு அனுமதி மறுப்பு!

வடக்கில் மீள்குடியேற்றம் தொடர்பான கூட்டம் யாழ். அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற போது ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாததால் அமைச்சின் செயலாளருக்கும் ஊடகவியலாளருக்கும் இடையே வாக்குவாதங்கள் நடைபெற்றன.
ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டும் செய்தி சேகரிப்புக்காக உள்ளே அனுமதிக் காதது ஏன் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதிகாரிகள் மட்டத்திலான கூட்டம் என்பதால் புகைப்படம் மட்டும் எடுத்த பின்னர் அனைவரையும் வெளியேறுமாறு அமைச்சின் செயலர் தெரிவித்ததையடுத்தே ஊடகவியலாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மக்களுக்கான கூட்டமா? அரசியல்வாதி களுக்கான கூட்டமா? என ஊடகவிய லாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அமைச்சின் செயலாளர் ரஞ்சனி நடேசபிள்ளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பிக்களான எம். சுமந்திரன், மாவை சேனாதிராஜா, அப்பாத்துரை, விநாயக மூர்த்தி, முன்னாள் எம்.பி. மருகேசு சந்திரகுமார் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண் டிருந்தனர்.

No comments:

Post a Comment