July 30, 2016

வலி.வடக்கில் மக்களின் நிலங்களை கிரிக்கெட் விளையாட பயன்படுத்திவரும் இராணுவம்!

கடந்த இரண்டு தசாப்தங்களாக விடுவிக்கப்படாத வலிகாமம் வடக்கு நிலங்கள் தற்போது கிரிக்கெட் விளையாடுவதற்காக பயன்படுத்தப்பட்டு வருவாதாக அப்பகுதி மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.


காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி பகுதியில் அமைந்துள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் இராணுவத்தினர் தாம் கிரிக்கெட் விளையாடுவதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

எமது சொந்த நிலங்களை இழந்து விட்டு வாழ்க்கையை அகதி முகாம்களிலும், கூடாரங்களிலும் கழித்து வருகின்றோம்.

இப்படி இருக்கையில் எவ்வாறு இராணுவ வீரர்கள் எங்கள் நிலங்களில் கிரிக்கெட் விளையாட முடியும்? என இடம்பெயர்ந்த மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த பகுதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தற்பொழுது விடுவிக்கப்பட்டிருந்தது, எனினும் நிலங்களை விடுவிக்குமாறு இராணுவ வீரர்களுக்கு பல முறை அறிவித்திருந்தும் அவர்கள், நிலங்களை இராணுவ சிற்றுண்டிச் சாலை மற்றும் சோதனை செய்யும் இடங்களாகவே பயன்படுத்தி வருகின்றனர்.

இதை எவ்வாறு அழைப்பது? இதுதானா நல்லாட்சி ? என மக்கள் தங்களது கேள்விகளை எழுப்பிக் கொண்டேதான் காலத்தை கழித்து வருகின்றனரே தவிர இது வரையிலும் தீர்வு எட்டவில்லை.



No comments:

Post a Comment