வவுனியா, ஓமந்தைப் பகுதியில் நேற்று 14 வயதுச் சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓமந்தை அருகே உள்ள புதிய வேலர்
சின்னக்குளத்தில், வீட்டில் தனித்திருந்த இந்தச் சிறுமியே, நேற்று மாலை
தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.
பாடசாலை சென்றிருந்த சகோதரி வீடு திரும்பிய வேளையில், தனது அக்கா சுருக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டுள்ளார்.
இதனையடுத்து, தகவல் அறிந்த அயலவர்கள் ஒன்று கூடியுள்ளனர். பின்னர் வவுனியாவுக்குச் சென்றிருந்த பெற்றோர் வீடு திரும்பியதும் இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நான்கு மாதங்களுக்கு முன்னர், பாடசாலையை விட்டு இடை விலகிய இந்தச் சிறுமியே, தாயார் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தேடிச் சென்றிருந்த கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் சமையல் மற்றும் ஏனைய வீட்டுப் பணிகளை செய்து வந்துள்ளார்
ஓமந்தை பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைப் பார்வையிட்டனர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி அமிர்தலிங்கம் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்குச் சென்று பார்வையிட்டு விசாரணைகள் நடத்தியதன் பின்னர் சடலத்தை வவுனியா வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவம் பற்றி அறிந்ததும், அங்கு சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சம்பவ இடத்தில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்குச் சிறுமியின் சடலத்தைக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.
இது தொடர்பான விசாரணைகளை ஓமந்தைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment