June 2, 2015

புத்தளத்தில் சிறுமியை கடத்திய காமுகனுக்கு விளக்கமறியல்! (படங்கள் இணைப்பு)

புத்தளத்தில் 06 வயது சிறுமியை கடத்தி காட்டுக்குள் வைத்திருந்த சந்தேக நபரை எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை புத்தளம் பொலிஸார் புத்தளம் மாவட்ட
நீதிமன்றில் ஆஜர் செய்த போது, எதிர்வரும் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் அநாகரிக்க தர்மபால ஆரம்ப பாடசாலையில் முதலாம் ஆண்டில் பயிலும் சிறுமியை குறித்த நபர் நேற்று கடத்திச் சென்றுள்ளார்.
சந்தேக நபர் சிறுமியை கடத்திச் சென்று காட்டிற்குள் மறைத்து வைத்திருந்த நிலையில், புத்தளம் தலைமையக பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நடத்திய தேடுதலை அடுத்து சுமார் இரண்டு மணிநேரத்திற்கு பின்னர் சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
அத்துடன் சிறுமியை கடத்திச் சென்ற நபர் காட்டில் பதுங்கியிருந்த நிலையில், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் புத்தளம் பாலாவி பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரணை மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment