June 5, 2016

பிரான்சுடன் உடன்பாடுகளில் கையெழுத்திட்டார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்!

மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர,
அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதுடன், இருதரப்பு உடன்பாடுகளிலும் கையெழுத்திட்டுள்ளார்.

கடந்த 1ஆம் நாள் தொடக்கம், 3ஆம் நாள் வரை, பிரான்சில் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர், ஜீன் மார்கா அய்ரோல்ட்டை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அத்துடன், பிரான்சின்  வெளிநாட்டு வர்த்தக மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர், அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசினார்.இந்தப் பேச்சுக்களின் முடிவில், இரண்டு நாடுகளுக்கும் இடையில், கலாசார ஒத்துழைப்பு  மற்றும் கூட்டு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன.

No comments:

Post a Comment