June 2, 2015

பொத்துவில் பிரதேசத்தில் உழவு இயந்திரப் பெட்டி கவிழ்ந்தில் 21 பேர் காயம்!

பொத்துவில் பிரதான வீதியில் உழவு இயந்திரப்பெட்டி கவிழ்ந்ததில் 21 பேர் காயமடைந்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று பொசன் விடுமுறையை கழிப்பதற்காக மொனறாகலை,
சியம்பலாண்டுவ பிரதேசத்திலிருந்து பொத்துவில், அறுகம்பைக்கு உழவு இயந்திரத்தில் வந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
வேகமாக வந்துகொண்டிருந்த உழவு இயந்திரம், அக்கரைப்பற்று மற்றும் சியம்லாண்டுவ ஆகிய வீதிகளுக்கான சுற்றுவட்டத்திலுள்ள வளைவில் திரும்பியபோது, உழவு இயந்திரப்பெட்டி கவிழ்ந்துள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த 21 பேரும் உடனடியாக பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு. சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களில் நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும், சிறுவனொருவன் பொத்துவில் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பில் பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment