கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் சீல் வைத்து மூடப்பட்டிருந்த அறையொன்றிலிருந்து தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்குச் சொந்தமான 151 துப்பாக்கிகள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த ஆயுத களஞ்சியசாலையில் ரி 56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட 3,473 துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த களஞ்சியசாலையில் இருந்து 3,322 துப்பாக்கிகள் பல்வேறு கடமைகளுக்காக விநியோகிக்கப்பட்டுள்ளதென குறித்த பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் பொலிஸாரிடம் அறிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிகள் விநியோகிக்கப்பட்டுள்ள விதம் மற்றும் விநியோகிக்கப்பட்ட தோட்டாக்களின் எண்ணிக்கை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த தேடுதல் உத்தரவிற்கு அமைய குறித்த ஆயுத களஞ்சியசாலை இன்று செவ்வாய்க்கிழமை சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது, குறித்த இடத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் உதவிச் செயலாளர் சமன் திசாநாயக்கவும் சென்றிருந்தார்.
No comments:
Post a Comment