August 16, 2014

செஞ்சோலைப் படுகொலை நினைவாக யேர்மனியில் நடைபெற்ற கவனயீர்ப்பு

சிங்கள இனவெறி அரசு தமிழர்கள் மீதான இனப்படுகொலையை மேற்கொள்ளும் முகமாக 2006 ஆண்டு ஆவணி மாதம் 18 திகதி  ஈழத்தமிழர்களின் எதிர்கால
சந்ததியை அழிக்கும் முகமாக செஞ்சோலை வளாகத்தில் முதலுதவி கற்பதற்காக காத்திருந்த  செல்வங்களை கொன்றழித்தான்.


8 ஆண்டுகள் கடந்து சென்றாலும்   நெஞ்சில் நீங்காத நினைவோடு அவ் செல்வங்களை வணங்கி அவர்களின் திருவுருவ  படத்துக்கு சுடர் ஏற்றி சர்வதேச சமூகத்திடம் நீதி கோரி பேர்லின் நகர மத்தியில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது . சிங்கள பேரினவாத அரசின் திட்டமிட்ட ஈழத்தமிழர்கள் பெண்கள்  மீதான பாலியல் வன்முறையை எடுத்துரைக்கும் முகமாக பதாதைகள் கட்டப்பட்டு யேர்மன் மொழியில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.பல்வேறு மக்கள் இக் கவனயீர்பை கவனத்தில் கொண்டு மேலதிகமான தகவல்களை பெற்றுக்கொள்ள எம்முடன் உரையாடினர்.

தமிழீழத்தில் பிறக்கும் எந்தக்குழந்தையும் அநாதரவாக தவிக்க கூடாது என்கிற எமது  தேசியத் தலைவரின் உயரிய சிந்தனையை எம் தலை மேல் சுமந்து எம் உறவுகளுக்கு  உதவிக்கரத்தை வழங்குவோம் .குருதியில் உறைந்த அந்த கொடிய நினைவுகள் சுமந்த நாளை நினைவுசுமந்து விடுதலையின் பாதையில் உண்மை உள்ள மனிதர்களாக எம் உறவுகளுக்காக நீதி வேண்டி தொடர்ந்தும் போராடுவோம்.









தமிழ் பெண்கள் அமைப்பு -  யேர்மனி 


No comments:

Post a Comment