கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நாளை முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தனர்.
கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தினால்
ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று திருகோணமலை இந்து
கலாச்சார மண்டபத்திற்கு அருகாமையிலுள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் இச்சங்கத்தின் தலைவர் இரா.ஜெயன்மோகன், செயளாலர் எஸ்.எம்.அனீஸ் மற்றும் தொண்டர் ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
கடந்த 10 தொடக்கம் 15 வருடகாலமாக கடமைபுரிந்த 300க்கு மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.
இவர்களுக்கான நிரந்தர நியமனங்களை பெற்றுத்தருமாறு பலமுறை கோரிக்கைகளும் ஆர்ப்பட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது.
ஆனால் எந்த வித பயனும் கிடைக்கவில்லை. இதனால் நாளைமுதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றில் ஈடுபட இருப்பதாக தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பாக இதற்கு முன்னர் பலமுறை ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment