June 2, 2015

போராடினால் எமது உரிமைகள் எம்மை வந்து சேரும் - யேர்மனியில் திரு வேல்முருகன் மற்றும் பேராசிரியர் கல்யாணசுந்தரம்! (படங்கள் இணைப்பு)

அவர்கள் கலந்துகொண்டனர் . இவ் நிகழ்வில் ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழக தொப்பிள்கொடி உறவுகளின் பங்களிப்பையும் , தமிழீழம் நோக்கிய பாதையில் தொடர்ந்தும் தமிழக மக்கள் எவ்வாறு தமது கடமைகளை செய்கின்றார்கள் என்றும் அத்தோடு கட்சி வேறுபாடின்றி அனைத்து அரசியல் தலைவர்களும் இணைந்து நிற்கின்றார்கள் என உறுதியளித்தனர் .

யேர்மனியில் Bielefeld மற்றும் Stuttgart நகரங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் சிறப்பு விருந்தினர்களாக தமிழகத்தில் இருந்து தமிழின உணர்வாளர்கள் திரு வேல்முருகன் மற்றும் பேராசிரியர் கல்யாணசுந்தரம்
உரிமைப் போரை எம்மால் கைவிட முடியாது எத்தனை இடர் வந்தாலும் தாயக , தமிழக மற்றும் புலத்து மக்கள் இணைந்து சவால்கள் நிறைந்த காலகட்டத்தில் ஒற்றுமையோடு செயற்பட வேண்டும் எனவும் பதிவு செய்யப்பட்டது .
எமது குரல் வலுவடைய வேண்டும் எமது கவன ஈர்ப்புப் போராட்டங்கள், பிரசார உத்திகள், கருத்துப் போர்கள், எமது ஈழவிடுதலைக் கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் வழித் தடங்கள் கூர்மை பெற வேண்டும் , அப்பொழுது நாம் முன்னெடுக்கும் இந்தப் போராட்டம் நிட்சயம் வெற்றி ஈட்டித்தரும் எனவும் மாவீரர்களின் இலட்சியம் நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று தமிழின உணர்வாளர்கள் தெளிவான நம்பிக்கையான கருத்துக்களை எடுத்துரைத்தனர் .
Stuttgart நகரில் திரு வேல்முருகன் அவர்களை யேர்மன் தமிழ்க் கல்விக் கழக பொறுப்பாளர் மற்றும் துறைசார் பொறுப்பாளர்கள் தலைமைக் காரியாலயத்தில் வரவேற்றனர் . அங்கு யேர்மனியில் பிறந்து வளரும் தமிழ்ச் சிறார்களுக்கு கல்வி கொடுக்கும் மிகப்பெரும் கட்டமைப்பை கண்டு பெரும் மகிழ்ச்சி அடைந்ததோடு அதற்காக அயராது உழைக்கும் உறவுகள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் . அத்தோடு அன்றைய தினம் மாலை நேரம் Zuffenhausen நகரில் மக்கள் சந்திப்பும் நடைபெற்றது .

















No comments:

Post a Comment