June 5, 2016

வவுனியா புளியங்குளம் பிரதேசத்தில் வீட்டுத்திட்டத்தில் பயணாளிகள் தெருவில் பாதிக்கப் பட்ட பலர் ..!

வவுனியா வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புளியங்குளம் பிரதேசத்தில் வீட்டுத்திட்டத்தில்
பயணாளிகள் தெருவில் பாதிக்கப் பட்ட பலர் பிரதேச செயலாளரிடம் சென்று நீதியை கோரியபோது பொலிசாரைக் கொண்டு மக்களை விரட்டியதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில் ,

குறித்த புளியங்குளம் பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு , மூன்று பிள்ளக்களுடன் கடும் பொருளாதார நெருக்கடுகளுடன் வாழும் குடும்பங்கள் பலவற்றிற்கு சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ள போதிலும் பதிவினை மட்டும் புளியங்குளத்தில் மேற்கொண்டு நகரின் மத்தியில் வாழ்பவர்களும் , ஓரளவு வசதி படைத்தவர்பளுடன் பிர இடத்தில் வீட்டு வசதி உள்ளவர்கள் என பல தரப்பட்டவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர் .

ஆனால் நீண்ட காலமாக இப் பிரதேசத்திலேயேவாழும் பலர் யுத்தத்தின்போது காயமடைந்தவர்கள்  , தடுப்பில் இருந்து வெளியேறியவர்கள் என பல்வேறு பட்டவர்களிற்கும் இந்த சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளது.

இதன்காரனமாக வீட்டுத் திட்டம் தொடர்பில் பிரதேச செயலகத்தில் ஓர் கலந்துரையாடல் இடம்மெறுவதனை அறிந்து சென்று இது தொடர்பில் கேள்வி எழுப்பிய எம்மை பொலிசாரைக் கொண்டு பிரதேச செயலாளர் வெளியேற்றினார். அது மட்டுமன்றி தொடர்ந்து பேசினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என்கின்றனர் பொலிசார் என குறிப்பிட்ட பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு மக்களால் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் பிரதேச செயலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

புளியங்குளம் பகுதியில் சுமார் 380 குடும்பங்கள் வாழ்கின்றனர்.இதில் 150 குடும்பங்களிற்கு கடந்த காலங்களில் வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. தற்போது அனுமதிக்கப் பட்டுள்ள மீள்குடியேற்ற அமைச்சின் 8 லட்சம் ரூபா வீட்டுத் திட்டத்தில் புளியங்குளம் பிரதேசத்திற்கு 68 வீட்டினை ஒதிக்கினோம்.

இதில் அவர்கள் வழங்கிய தகவல்களை ஆய்வு செய்து அவர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் முன்னுரிமையில் உள்ளவர்களே தேர்வு செய்யப்பட்டனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட குடும்பங்களிற்கான ஓர் கலந்துரையாடலே குறித்த தினத்தில் இடம்பெற்றவேளையில் அழைக்கப்படாத சிலர் அங்கு வருபை தந்து வேண்டும் என்றே குழப்பகரமான செயலில் ஈடுபட்டனர்.

இருப்பினும் பல தடவைகள் அவர்களிற்கு நிலமையை கூறி இது அழைக்கப்பட்டவர்களிற்கான கலந்துரையாடல் அதனால் அழைக்கப்படாதவர்கள் இதில் இருந்து வெளியேறுங்கள் என நானும் எமது ஊழியர்களும் தெரிவித்தும் குழப்பத்தை விளைவித்தோர் செவி சாய்க்க மறுத்தமையினால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் இதனை கூறி அவர்களை வெளியேற்றினர்.

இருப்பினும் எமது மாவட்டத்திற்கு 65ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் மூலமும் குறிப்பிட்ட தொகை வீடுகள் கிடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது . அதன் மூலம் ஏனைய குடும்பத்திற்கும் வழங்கப்படும். என்றார்.

இந்த நிலையில் குறித்த விடயம் தற்போது மாவட்ட அரச அதிபரின் கவனத்திற்கு பிரதேச மக்கள் கொண்டு சென்றுள்ளனர்.

No comments:

Post a Comment