June 5, 2016

மலேசிய தமிழர் தலைவர் டத்தோஸ்ரீ நல்லாவுக்கு டான்ஸ்ரீ என்ற உயரிய விருது!

மலேசிய தமிழர் தலைவர் டத்தோஸ்ரீ நல்லாவுக்கு ‘டான்ஸ்ரீ’ என்ற உயரிய விருதை அந்நாட்டு அரசாங்கம் வழங்கி கௌரவித்துள்ளது.
மலேசிய தமிழர் தலைவர் டத்தோஸ்ரீ நல்லாவுக்கு ‘டான்ஸ்ரீ’ என்ற உயரிய விருதை அந்நாட்டு அரசாங்கம் வழங்கி கௌரவித்துள்ளது.

மலேசிய மன்னர் துவாங்கு அப்துல் ஹலிம் பிறந்தநாளை முன்னிட்டு மலேசிய இந்தியர் ஐக்கிய கட்சியின் தேசிய தலைவரும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான டத்தோஸ்ரீ நல்லா கே.எஸ்.க்கு டான்ஸ்ரீ என்ற உயரிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

மலேசிய அரசியலில் மிகவும் பிரபலமான தலைவர்களில் ஒருவராக விளங்கிவரும் டான்ஸ்ரீ நல்லா தேசிய முன்னணி அரசாங்கத்தின் உயரிய விருது பெறும் தமிழர் தலைவராக திகழ்கிறார்.

1970-ம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வரும் டான்ஸ்ரீ நல்லா தொழில்முனைவராகவும் விளங்கி வருகிறார். தற்போது மலேசிய இந்தியர் ஐக்கிய கட்சியை தோற்றுவித்து அதன்மூலம் அரசியல், சமூகப் பணியாற்றி வருகிறார்.

மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கிவரும் டான்ஸ்ரீ நல்லா, தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளின் ஆதரவு கட்சியாக இருந்து வருகிறார்.

டான்ஸ்ரீ நல்லாவுக்கு ஏற்கனவே மலேசிய அரசாங்கமும், மன்னர்களும் டத்தோ, டத்தோஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment