June 5, 2016

ஊடகவியலாளர் ப்ரடி கமகேயைத் தாக்கிய இருவர் கைது!

ஊடக சுதந்திரத்துக்கான செயற்பாட்டுக் குழுவின் அமைப்பாளரும் இணைய ஊடகவியலாளர்கள்
சங்கத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான ப்ரடி கமகே மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 
சந்தேகநபர்கள் இருவரையும் இன்று நீர்கொழும்பு பொலிஸார் கைதுசெய்தனர். குறித்த சந்தேகநபர்களை நீர்கொழும்பு பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய பொலிஸார், எதிர்வரும் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க அனுமதி பெற்றனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள், நீர்கொழும்பு மாநகரசபையில் பணிபுரிபவர்கள் எனவும் நீர்கொழும்பு ஜனஜயகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு பயன்படுத்திய தடிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment