April 17, 2015

மத்திய மாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான யோசனையொன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மாகாண துணைச் செயலாளர் பீ.ஜி. திஸாநயாக்கவிடம் இந்த யோசனை ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரஞ்சித் அலுவிஹாரேயினால் இந்த யோசனைத் திட்டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த யோசனை முன்வைக்கப்படவிருந்த போதிலும் சில காரணிகளினால் யேசானை ஒப்படைக்கப்படவில்லை. எனினும், இன்றைய தினம் குறித்த யோசனை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment