உலகமே வியந்து நோக்கும் வண்ணம் நேர்த்தியாக கட்டியெழுப்பப்பட்ட தமிழீழப் பெண்களின் வாழ்வு இன்று சிங்களப் பேரினவாத அரசால் திட்டமிட்டுச் சிதைக்கப்படுகிறது. தமிழீழப்பகுதியில் வாழ்கின்ற தமிழ்ப் பெண்கள் மட்டுமன்றி
இலங்கைத் தீவெங்கும் வாழ்கின்ற தமிழ்ப் பெண்களும் பாலியல் துன்புறுத்தல்கள் பண்பாட்டுச்சீர்கேடுகள் கட்டாயக்கருகலைப்புகள் எனத் துயரங்களைத் தாங்கி நடைப்பிணங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள.
தமிழீழப் பிரதேசத்தில் சிங்கள இராணுவம் பாடசாலைக்கு செல்லும் தமிழ் சிறுமிகளை கடத்தி பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். அதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
பெண்கள்போரின் போது தனது கணவன்மார்களை இழந்து குடும்ப சுமைகளை அவர்களே பொறுப்பேற்று நடத்த வேண்டியவர்களாக உள்ளார்கள். (80000 பெண்கள்)தனியாக வாழும் பெண்கள் மீது பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவர்களை சிறைகளில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.
தமிழீழத்துப் பெண்கள் மிகவும் கொடூரமான இராணுவ ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றார்கள். எதிரியின் பாலியல் பலாக்காரம் எமது பெண்கள் மீது பிரயோகிக்கப்படுகின்றது. எதிரி எம்மீது பிரயோகிக்கும் சகல வன்முறைகளுக்கும் எதிராக உறுதியுடன் போராட வேண்டியவளாகப் பெண் திகழ்கிறாள். போராட்டத்தின் மூலமே தன் வாழ்வை உறுதி செய்து கொள்ள வேண்டியவளாகின்றாள்.
2009ம் ஆண்டு நடந்த யுத்தத்தின் போது இசைப்பிரியா என்ற தமிழ்ப் பெண் கைதுசெய்து சிங்களப் படையினரால் சிதைக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்ட காட்சி ‘சனல் 4′ வெளியிட்டுள்ளது. இத்தகைய கொடூரங்கள் இசைப்பிரியாவுக்கு மட்டும் நிகழ்ந்ததல்ல. இந்தக் காணொளி மூலம் இசைப்பிரியா தமிழ் பெண்கள் மீதான சிங்களக் கொடூரங்களின் அடையாளமாக உலகின் முன் நீதி கேட்டு நிற்கின்றனர்.
இவர்களின் இந்த அவல வாழ்வு முற்றாக நிறுத்தப்பட்டு சுபீட்சமான எதிர்காலம் உருவாக்கப்படவேண்டும். இதற்கு அனைத்துலகு எங்கும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ்ப் பெண்களாகிய நாங்களும் மற்றைய பெண்களும் உதவ முன்வரவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
No comments:
Post a Comment