கடந்த ஆட்சிக்காலத்தில் நாமல் ராஜபக்ஷவுக்காக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவரை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த ஒரு தசாப்தமாக நாமலுக்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு குற்றச்செயல்களை மேற்கொண்ட பிரதான கொலையாளி கப்டன் பாரத கொடிதுவக்கு என்பவரை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.
மூன்றாவது கெமுனு படையணியினை சேர்ந்த, மாத்தறை இராணுவ முகாமில் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட கப்டன் பாரத கொடிதுவக்கு, நாமல் ராஜபக்சவுக்காக பல குற்றச்செயல்களை செய்துள்ளார். இரத்தினகல் அகழ்வு, எதிரிகளை கொலை செய்தல், இளம் பெண்களை கடத்தி நாமலுக்கு வழங்கியமை, கப்பம் பெறல் ஆகிய குற்றச்செயல்களின் ஈடுபட்ட பிரதான சந்தேகநபராக பாரத கொடிதுவக்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் இருந்து பிணையில் விடுதலையாகியுள்ள கப்டன் பாரத கொடிதுவக்கு மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 30ஆம் திகதி இரவு 7.50 மணியளவில் வெள்ளை நிறமுடைய மெஸ்டா ரக வாகனத்தில் வருகை தந்த நபர்களினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாத்தறை வெல்மடம பிரதேசத்தில் அமைந்துள்ள ரூஹுனு பல்கலைகழகத்திற்கு முன்னால் வைத்து டீ.56 ரக துப்பாக்கியால் தாக்குதல் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கி ஒழுங்கான முறையில் இயங்காமையினால் பாரத கொடிதுவக்கு, அருகிலுள்ள ரூஹுன பல்கலைக்கழகத்திற்குள் ஓடி சென்று உயிரை காப்பாற்றியுள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் பல்கலைக்கழத்திலிருந்த பாதுகாப்பு அதிகாரிகளினால் பாதுகாப்பாக மீட்கப்பட்ட பாரத கொடிதுவக்கு, மாத்தறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து 31ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது தெவிநுவர, குருந்துவத்தை பாடசாலை மைதானத்தில் சந்தேகநபர்களின் வாகனம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
அந்த வாகனத்தில் சாரதி ஆசனத்திற்கு கீழ் இருந்த கையடக்க தொலைபேசி ஒன்றும், துப்பாக்கி கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் பை ஒன்றும் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வாகனம் மற்றும் வாகனத்தின் அனுமதி பத்திரங்கள் போலியானதென பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கப்டன் பாரத கொடிதுவக்கு மற்றும் அவரது சகோதரர் கப்டன் மூர்தி கொடிதுவக்கு ஆகிய இருவரும் நாமல் ராஜபக்சவின் நண்பர்களாவர். மாத்தறை, அன்த்துடுவாவே, அசபுவ ஆரண்யசேனாசதய பகுதியில் புதையல் தோண்டியது இந்த சகோதரர்களாவர்.
கப்டன் பாரத கொடிதுவக்கு 3ஆவது கெமுனு படையணியில் மாத்தறை இராணுவ முகாமில் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட சந்தர்ப்பத்தில், மாத்தறை பிரதேசத்தில் ராஜபக்சகளுக்கு எதிராக அரசியல் கருத்துக்களை வெளியிட்டவர்கள் மீது கடுமையான தாக்குதல் மேற்கொண்ட அச்சம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்பலமே சுத்தா என்ற பாதாள உலக குழுவை சேர்ந்த ஒருவரை ஈடுபடுத்தி நாமலின் கொலையாளியான பாரதி இவ்வாறு செயற்பட்டுள்ளார். இந்த குற்றச்செயலுக்காக பாரத நாமலிடம் இரு விசேட சலுகைகளை பெற்றுக்கொண்டுள்ளார் என குறித்த சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.
தென் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டேனி ஹித்தெட்டிய கொலை செய்யப்பட்டதும் இவர்களின் செயற்பாட்டாளரான மதுஷ லக்ஷான் என்பவரினாலாகும். மது லக்ஷான் என்பவர் கைது செய்யப்பட்டதனை தொடர்ந்து அவரை கொலை செய்து சாட்சிகளை மறைக்க பாரத நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தற்போது சாட்சிகளை அழிக்கும் நடவடிக்கை பாரதவை நோக்கி வந்துள்ளதாக கடந்த 30ஆம் திகதி சம்பவம் பார்க்கப்படுகின்றது. நாமல் ராஜபக்ச மாத்திரம் அல்ல அவரது தந்தையான மஹிந்த ராஜபக்சவின் கொலை வரலாறும் இவ்வாறே எழுதப்பட்டுள்ளது.
அதற்கமைய கப்டன் பாரத கொடிதுவக்குவை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி சாதாரணமான கொலை முயற்சி அல்ல என தற்போது வரையில் சந்தேகம் எழுந்துள்ளது. தங்களுக்கு எதிரானவர்களை பாதாள உலக குழுவினரை ஈடுபடுத்தி கொலை செய்த பின்னர் வேறு ஒருவரை ஈடுபடுத்தி கொலையாளியை கொலை செய்து சாட்சிகள் மறைக்கப்படுவது ராஜபக்ஷகளின் சூழ்ச்சிகளில் ஒன்றாக உள்ளதாக சிங்கள ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment