புங்குடுதீவு, வல்லன் வீதி வழியாக பேரூந்து போக்குவரத்தினை செயற்படுத்தும் நோக்கில் சூழகம் அமைப்பினால் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
சூழகம் அமைப்பினால் புங்குடுதீவில் தொடர் சிரமதானமும் விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . முதல் கட்டமாக ஆலடி சந்தியில் இருந்து வல்லனுக்கு செல்லும் வீதியின் ஊடாக பேரூந்து சேவையினை பல தசாப்த காலங்களுக்கு பின்னர் மீண்டும் நடைமுறைப்படுத்தும் நோக்கில் அவ்வீதியில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
அதாவது குறைந்த பட்சம் இரு தடைவைகளாவது ( காலையில் பாடசாலை ஆரம்பிக்கும் நேரமும் பின்பு பாடசாலை முடிவுறும் தறுவாயிலிலுமாவது பஸ் போக்குவரத்தினை இடம்பெறச் செய்யும் நோக்கில் ) ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வீதியிலேயே மாணவி வித்தியாவின் பூதவுடலும் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அந்த பகுதி உட்பட ஏனைய பகுதிகள் துப்பரவு செய்யப்பட்டு தற்போது நிறைவு பெற்றுள்ளது.
சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா தலைமையில் இம் மாத ஆரம்பத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தமிழரசுக் கட்சி கொழும்புக் கிளைச் செயலாளர் இரத்தினவேல், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment