போதைப்பொருள் பாவனை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வடக்கு மாகாண மதுவரித் திணைக்களத்தினர் யாழில் நேற்று
பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.இப்பேரணி யாழ் .வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை அருகில் நேற்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பித்து பேரணியாகச் சென்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நிறைவுற்று கூட்டமொன்றும் நடைபெற்றது.
இப்பேரணியில் மேலதிக அரசாங்க அதிபர் பி.செந்தில் நந்தனன், கொழும்பு மதுவரி ஆணையாளர் அ.போதரகம, யாழ்.மாவட்ட வாழ்வெழு ச்சிப் பணிப்பாளர் க. மகேஸ்வரன், சமுர்த்தி முகாமையாளர் கா.சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.சத்தமின்றி இரத்தமின்றி போதை யுத்தமொன்று நடக்குது என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் ஊர்வலத்தில் ஈடுபட்டிருந்தனர்.தமது வாழ்க்கையில் சிறிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க முடியாதவர்களும் தமது மகிழ்ச்சியை வழிதெரி யாமல் பகிர்ந்து கொள்ள நினைப்பவர்களுமே மதுபோதைக்கு அடிமையாகின்றனர். மதுபோதை என்பது ஒரு நோயாகும். அது மூளை நோயாகவும் இனங் காணப்பட முடியும்.
மதுபோதையில் இருந்து விடுபட நினைப்பவர்கள் முதலில் முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.குடும்பத்தில் ஒருவர் குடித்திருந்தாலும் அது முழுக் குடும்பத்தையுமே பாதிக்கின்றது.பிள்ளைகளின் கல்வி, மனைவியின் செயற்பாடு என எல்லாமே மாற்றம் பெறுகின்றன.ஆகையால் மதுபோதைப் பாவனைக்கு அடிமையானோர் அதிலிருந்து வெளிவருவது அவசியமானதாகும்.இதற்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் புனர்வாழ்வு நிலையம் (குருந்தகம்) இயங்கி வருகின்றது.மதுபோதைக்கு அடிமையானோர்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்று அதிலிருந்து விடுபட முடியும்.
பாடசாலை மாணவர்கள் முதற்கொண்டு அனைவரும் குருந்தகத்திற்கு வருகை தந்து சிகிச்சை பெற்று முழு மையாக போதைப்பழக்கத்திலிருந்து விடுபடமுடியும் என்று உளவள வைத்தியர் ஏ.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வில் மதுவரித் திணைக்கள பணியாளர் ள் மற்றும் சமுர்த்தி பணியாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர் .
No comments:
Post a Comment