July 5, 2014

கிளிநொச்சியில் கவனஈர்ப்பு போராட்டம்

தமிழ் மக்களது நிலங்களை விட்டு இராணுவம் வெளியேற வேண்டும் என்று கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டம்
ஒன்றை இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பதாக நடத்தியுள்ளன. பரவிப்பாஞ்சான் மக்களுடைய மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டாம் கட்டப் போராட்டமாக இதனை இன்று (04.07.14) நடத்தியுள்ளது.
இன்று காலை 11 மணி தொடக்கம் 12 மணி வரை இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும் கிளிநொச்சியில் பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களது வீடுகளையும், பொது நிலையங்களையும் இராணுவம் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ளதால் இடம்பெயர்ந்துள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்ப முடியாதுள்ளனர்.
பல ஆண்டுகளாக உறவினர், நண்பர்கள் வீடுகளில் அகதிகளாக அவல வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். இம் மக்களின் மீள் குடியமர்வை வலியுறுத்தி கடந்த மே 28ம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டிருந்தது. எனினும் இன்றுவரை அம்மக்களின் மீள் குடியமர்வு தொடர்பாக எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் பரவிப்பாஞ்சான் உட்பட இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்குச் சொந்தமான காணிகள், வீடுகளில் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து உடனடியாக வெளியேறுவதுடன், அந்த வீடுகளையும், நிலங்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியும், இது தொடர்பில் சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியே மீண்டும் இக்கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இன்றைய போராட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை தெரிவித்திருந்தது.அக்கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் போராட்டத்தினில் பங்கெடுத்திருந்தனர்.killnosekillnose-01

No comments:

Post a Comment