யாழ்.மந்திகை சந்தியிலுள்ள கட்டடப் பொருட்கள் விற்பனை நிலையத்திருந்த
மாபிள்களை திருடிய குற்றச்சாட்டில் புலோலி பகுதியை சேர்ந்த 59
வயதுடைய சந்தேகநபரை சனிக்கிழமை (28) இரவு கைதுசெய்ததாக பருத்தித்துறை பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (01) தெரிவித்தார்.
மேற்படி விற்பனை நிலையத்தின் முன்பக்கமாக சங்கிலி போடப்பட்டு கட்டப்பட்டு அடுக்கப்பட்டிருந்த நிலத்துக்குப் பதிக்கப்படும் மாபிள்களில் 06 பெரிய மாபிள்கள் கடந்த வியாழக்கிழமை (26) திருட்டுப்போயிருந்தது. ஏற்கெனவே இவ்வாறு இரண்டு தடவைகள் இந்த நிலையத்தில் திருட்டு இடம்பெற்றமையால் உரிமையாளர் கடையின் முன்பக்கம் சி.சி.ரிவி கமெரா பொருத்தியிருந்தார்.
இந்நிலையில் கமெராவை பரிசோதனை செய்தபோது, புலோலியை சேர்ந்த நபர் ஒருவர் சங்கிலியை அறுத்து மாபிள்கள் திருடுவது தெரியவந்தது. வீடியோ பதிவுடன் பொலிஸ் நிலையத்தில் உரிமையாளர் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்டவர், அப்பகுதியில் கடைகள் கட்டி வாடகைக்கு விடும் பணக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment