June 21, 2016

சரத் பொன்சேகாவிற்கு அமெரிக்க வீசா மறுக்கப்பட்டது?

அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவிற்கு அமெரிக்க வீசா மறுக்கப்பட்டுள்ளதாக ராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அமெரிக்காவிற்கு விஜயம் செய்வதற்காக சரத் பொன்சேகா, தூதரகம் ஊடாக வீசா விண்ணப்பம் செய்திருந்தார்.

எனினும், சரத் பொன்சேகாவிற்கு அமெரிக்க வீசா வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


கடந்த ஆண்டிலும் தமது புதல்வியரை பார்வையிட அமெரிக்கா விஜயம் செய்ய விண்ணப்பித்த போதிலும் வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களின் காரணமாக இவ்வாறு வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும், வீசா நிராகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்த ஊகங்கள் பொய்யானவை என சரத்பொன்சேகாவின் ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment