May 24, 2016

நியூயோர்க் சட்டவாளர்கள் கூடத்தில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை!

தமிழீழத் தேசிய துக்க நாளாகிய மே மாதம் 18ம் திகதியன்று, நியூயோர்க் சட்டவாளர் கூடத்தில்
முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னெடுப்பில் இடம்பெற்று வரும் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையினை, அனைத்துலக மட்டத்தில் புகழ்பெற்ற பிரமுகர்கள் வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில் இந்நினைவுப் பேருரையினை, கிழக்குத் தீமோரின் சுதந்திரத்திற்கான பொதுவாக்கெடுப்பில் முக்கிய பாத்திரம் வகித்த அலன் நார்ன் (Mr.Allan Nairn) அவர்கள் வழங்கியிருந்தார்.

அத்துடன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், மற்றும் அரசாங்கப் பிரதிநிதிகள் என பலரும் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.

இதேவேளை, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இலங்கைத் தமிழ் சங்கம், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையினை நினைவுறுத்தி நடப்பட்டுள்ள மரத்தினை மையப்படுத்தி வணக்க நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.







No comments:

Post a Comment