யேர்மனியின் தென்மேற்கு மாநிலங்களில் உள்ள தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகள் மிகவும் சிறப்பாக யேர்மனி தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் நடாத்தப்பட்டது. இப் போட்டிகளில் அந்த மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களின் 250 மாணவமாணவிகள் மிக ஆர்வத்துடன் பங்குபற்றிச் சிறப்பித்தனர்.
ஆரம்ப நிகழ்வாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு பின் யேர்மனியத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. பின் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு அதன் பின் தமிழாலயக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. பின் மாணவமாணவிகளின் அணிவகுப்பு மரியாதை தேசியக் கொடிகளுக்கு வழங்கப்பட்ட நிகழ்வு மிகச் சிறப்பாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டது. வெற்றிபெற்ற வீரர்களுக்கான பதக்கங்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டமை சிறப்பாக அமைந்தது. பின் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்ற தமிழாலயங்களுக்கு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
முதலாமிடத்தை Saarbrücken தமிழாலயமும்
இரண்டாமிடத்தை Landau தமிழாலயமும்
மூன்றாமிடத்தை Bruchsal தமிழாலயமும் பெற்றுக்கொண்டன.

No comments:
Post a Comment