இத்தாலியின் கேப்பாசி கடலில் நீந்திய இரண்டு இலங்கையர்கள், கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையர்கள் சிலர் விடுமுறையில் லிடோ பொசேய்டோன் பிரதேசத்தில் இருந்து கேப்பாசி நகருக்கு சென்றிருந்தனர்.
இவர்கள் கடலில் நீந்தி குளித்து கொண்டிருந்த போது பலத்த காற்றுடன் வலுவான அலைகள் இவர்களை இழுத்துச் சென்றுள்ளன.
44 மற்றும் 38 வயதான சகோதரர்களே இவ்வாறு கடலில் மூழ்கி இறந்துள்ளனர். கடலில் மூழ்கி கொண்டிருந்த மற்றுமொரு நபரை அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.
இறந்த நபர்களில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கரையோர காவல் படையினரின் ஹெலிக்கொப்டார் உதவியுடன் மற்றைய நபரின் சடலத்தை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment