August 16, 2014

சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலகரீதியில் நடாத்திய தமிழீழக்கிண்ணத்திற்கான தமிழர்விளையாட்டுவிழா 2014

சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலகரீதியில் நடாத்திய தமிழீழக்கிண்ணத்திற்கான தமிழர்விளையாட்டுவிழா 2014 ஓகஸ்ட் மாதம் 09ம், 10 ம் திகதிகளில் சூரிச் வின்ரத்தூர் நகரில் அமைந்துள்ள Sportanlage Deuttweg   மைதானத்தில் சிறப்பாக
நடைபெற்று முடிந்தது. புலம் பெயர்ந்து வாழும் எமது இளம் தலைமுறையினரிடம் தாயகம் நோக்கிய தேடலை ஏற்படுத்தும்நோக்ககில் தமிழர் இல்லம் இச்சுற்றுப் போட்டியினை நடாத்தி வருகின்றது. பொதுச்சுடர், ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதனை தொடர்ந்து சுவிஸ் கொடி, தமிழீழ தேசியக்கொடி ஏற்றிவைத்து அகவணக்கம் செலுத்தி விளையாட்டுத்துறை கொடி, தமிழர் இல்லம் கொடி என்பன ஏற்றிவைக்கப்பட்டது.



ஓலிம்பிக் தீபத்தினை றோயல் விளையாட்டுகழக அணித்தலைவர் திரு.கந்தையா நிசாந்தன் அவர்கள் ஏற்றி வைக்க வீரர்கள் அனைவரும் உறுதிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். காலநிலை இடையிடையே பயமுறுதிக் கொண்டாலும், போட்டிகள் சிறப்பாக நடைபெற தனது ஒத்துழைப்பை வழங்கியது.

ஒரேநேரத்தில் பல்வேறு விளையாட்டுக்களும் நடைபெறக்கூடிய பிரமாண்டமைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிளித்தட்டு, மென்பந்து துடுப்பாட்டம் முதலான குழுவிளையாட்டுக்களிலும் தடகள போட்டிகளிலும் புலம்பெயர்இளம் தலைமுறையினர் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். பிரான்ஸ், டென்மார்க், நெதர்லாந்து, இங்கிலாந்து, Nஐர்மனி, இத்தாலி உள்ளிட்ட பலநாடுகளிலிருந்து அதிகளவில் அணிகள் பங்கேற்றன.

உதைபந்தாட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அறுபதிற்கும்மேற்பட்ட அணிகள் களம் இறங்கின. இறுதி ஆட்டம் மின்னொளியில் மிகவும் விறுவிறுப்பாகநடைபெற்றமை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

தமிழீழத்தின் தேசியவிளையாட்டான கிளித்தட்டில் பெரியோர் அணிகளே பங்குபற்றியிருந்தாலும் புலம்பெயர் இளையோர் அதனை வியப்புடன் பார்த்து இரசித்ததுடன் தாங்களும் விளையாடவேண்டும் என்ற ஆர்வத்தையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.

வளர்ந்தோர் உதைபந்தாட்டத்தின் இறுதியாட்டம் முதன்முதலாக 'தீபம்" தொலைக்காட்சியில் நேரஞ்சல் செய்யப்பட்டது. இறுதிஆட்டத்தில் டென்மார்க் தெரிவு அணியினை எதிர்த்து தமிழர்விளையாட்டுக்கழகம் 93 பிரான்ஸ் மோதி வெற்றிக்கிண்ணத்தினையும் தனதாக்கிக்கொண்டது.

டென்மார்க் அணி வாகனம் பழுதடைந்தநிலையில் ஓய்வின்றிஇ உறக்கமின்றிஇ உணவுமின்றி பலத்த சிரமங்களுக்குமத்தியில் பிற்பகல் 14.30 மணிக்கே மைதானத்தைவந்தடைந்தனர். முதல்நாள்;; இரவே தங்களின் நிலைப்பாட்டினை அறியதந்ததினால் அனைத்துகழகங்களும் தமது ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்கள். இருந்தும் டென்மார்க் அணி தங்களுடைய குழுநிலை ஆட்டத்தினை இடைவேளையின்றி ஆடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். இருந்தும் சிறப்பாக ஆடி இருபிரிவுகளும் (வளர்ந்தோர், 15வயது) இறுதியாட்டத்திற்கு தெரிவாகியது பாராட்டப்படவேண்டியதே.

சனிக்கிழமை இரவு பெய்த கடும் மழை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டங்கள் 30 நிமிடங்கள் தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டது.

கரப்பந்தாட்டம் (4 பேர்கொண்டது) செற்றப், பார்வையாளர்போட்டிகள், சங்கீதக்கதிரை, 21வயது, 09வயது, 13வயதுப் பிரிவுகளுக்கான உதைபந்தாட்டத்துடன் எமது உதைபந்தாட்ட முன்னோடிகளை மதிப்பளிக்கும் முகமாக 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான ஒரு பிரிவும் உருவாக்கப்பட்டது. இதில் பிரான்ஸ், நெதர்லாந்து உட்பட எட்டு கழகங்கள் கலந்து சிறப்பித்தன.

இறுதயாட்டத்தில் சுவிஸ் ஊவைலடிழலள டீடரந விளையாட்டுக்கழகம் இரண்டாவது தடவையாக வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கிக்கொண்டது.

மென்பந்து துடுப்பெடுத்தாட்டபோட்டியில் பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து உட்பட முப்பதிற்கும்மேற்பட்ட அணிகள்மோதி இறுதியில் தொடர்ச்சியாக இருதடவைகள் வெற்றியைதமதாக்கிக்கொண்ட பிரான்ஸ் யாழ்டன் விளையாட்டுக்கழகத்தினை பின்தள்ளி சுவிஸ் சூரிச் பிரென்ஸ் விளையாட்டுக்கழம்.

தமதாக்கிகொண்டது. 21 வயதுபிரிவினர்க்கான உதைபந்தாட்டத்தில் தொடர்ச்சியாக இருதடவைகள் வெற்றியைதமதாக்கிக்கொண்ட பிரான்ஸ் ஈழத்தமிழர் உதைபந்தாட்டசம்மேளன தெரிவுஅணி இறுதியாட்டத்திற்கு தெரிவாகவில்லை. தொடர்ச்சியாக 11 வருடங்கள் வருகைதந்து முதன்முதலாக வெற்றிக்கிண்ணத்தினையும் சுழல்கிண்ணத்தினையும் டென்மார்க்தெரிவு அணி தமதாக்கிக்கொண்டனர்.

இரவு ஒன்பது மணிக்கு அனைத்து நிகழ்வுகளும் நிறைவுபெற்றது.

இருநாட்களும் சுவிஸ் பாதுகாப்பு அதிகாரிகளுடன் எமது தமிழ் பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து தமது பணியினை ஆற்றியிருந்தார்கள.; குறிப்பாக இறுதிஆட்டம் நடைபெற்றவேளை சிறப்பாக வழங்கியிருந்தார்கள்.

























புலம்பெயர் நாடுகளில் உள்ள இளம்தலைமுறையினர் ஏனைய துறைகளைப்போலவே விளையாட்டுத்துறையிலும் சிறந்து விளங்குகிறார்கள் என்பதையும் தமிழர்கள் அனைத்துவிடயங்களிலும் ஒற்றுமைப் பலத்துடன் இருக்கின்றார்கள் என்பதையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்தது இந்த ஆண்டின் தமிழர்விளையாட்டுவிழா.


முடிவில் பார்வையாளர்களும், பணியாளர்களும், விளையாட்டுவீரர்களும் மைதானதுப்பரவுபணிகளில் தம்மை இணைத்துக்கொண்டது. விளையாட்டின் அதியுயர்பண்பாகப் பேணப்படும் தலமைதாங்குதல், அணியாக உழைத்தல், விட்டுக்கொடுத்தல் போன்றவற்றை எமக்கு உணர்த்தி நின்றது.


No comments:

Post a Comment