செல்வராசா கஜேந்திரன், மக்களது விருப்பத்திற்கு மாறாக நடைபெறும் இந்த நில அபகரிப்பை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றும் தெரிவித்தார்.
சிறிலங்கா அரசாங்கமும் படையினரும் தமிழ் மக்களை அச்சுறுத்திவிட்டு அவர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்க முயல்வதாக குற்றம்சாட்டியுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர்
இந்தச் செயற்பாடுகளுக்கு எதிராக அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு நாம் தொடர்ந்து போராடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
தென்மராட்சி மீசாலையில், ஆசைப்பிள்ளை ஏற்றத்திற்கு அருகாமையில் சிறிலங்கா படையின் 52 ஆவது படைப்பிரிவு அமைந்துள்ள 50 ஏக்கர் காணியை படை முகாமிற்காகச் சுவீகரிக்கும் செயற்பாட்டுக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போராட்டத்தின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேற்படி படை முகாம் அமைந்துள்ள காணி வயோதிபப் பெண்மணி ஒருவருக்கு சொந்தமானது. இந்தக் காணியை அபகரிப்பதற்கு எதிரான செயற்பாட்டில் அந்த பெண்மணியும் நேற்று களமிறங்கியிருந்தார்.
இதில் கலந்துகொண்ட கஜேந்திரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
சிறிலங்கா படையினருக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் அளவீடு செய்யும் நடவடிகைக்கையை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இன்றைய தினம் அளவீடு செய்யவிருந்த காணி படைத் தலைமைய கத்திற்காகவே சுவீகரிக்கப்படவுள்ளது.
ஏற்கனவே அந்தக் காணி உரிமையாளரின் அனுமதியின்றி அக்காணியில் படைத்தலைமையகம் அமைக்கப்பட்டு, அந்தத் தலைமையகம் திறந்தும் வைக்கப்பட்டுள்ளது.
இக்காணி விலைக்கு வாங்கப்பட்டே அதில் படைத்தலைமையகம் அமைக்கப்பட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதுவொரு அப்பட்டமான பொய் என்பது இப்பொழுது தெரிகிறது. இராணுவமும் சரி அரசாங்கமும் சரி தமிழர்களை எப்படியாவது ஏமாற்றி அச்சுறுத்தி தமிழர்களின் இந்தக் காணிகளை பறிக்க வேண்டும் என்ற நடவடிக்கையாகவே இந்தச் செயற்பாடுகள் இருக்கின்றன.
மக்களது விருப்பத்திற்கு மாறாக நடைபெறும் இந்த நில அபகரிப்பை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்க போவதில்லை என்பதை மிக ஆணித்தரமாக தெரிவிப்பதுடன், எதிர்காலத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் காணி அளவீடு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டால் அதனையும் எதிர்ப்போம் என மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment