முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிற்கு வைத்தியசாலையில் சிகிச்சை
அளிக்க வேண்டிய அவசியமில்லை என சிறைச்சாலை வைத்தியர் தெரிவித்துள்ளார்.
ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலை வழக்கின் சந்தேக நபர்களில் ஒருவரான அனுர சேனாநாயக்க கடந்த 23ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
அனுர சேனாநாயக்கவின் உடல் நிலை நன்றாகவே காணப்படுகின்றது தெரிவிக்கப்படுகிறது. அனுரவை சிறைச்சாலை வைத்தியர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
எனவே சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்து அனுரவிற்கு சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியமில்லை.
அனுர சேனாநாயக்கவிற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமா என பரிசோதனை செய்யுமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதேவேளை, கைதிகளிடமிருந்து ஏதேனும் அச்சறுத்தல் ஏற்படும் என்ற காரணத்தினால் அனுர சேனாநாயக்கவிற்கு தனிச் சிறை வழங்கப் பட்டுள்ளதாகவும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment