May 4, 2015

தேசியப்பற்றும் சரவணபவனும் உதயன் பேப்பரும் !


யாழ்ப்பாண பொதுநுாலகத்தில் பத்திரிகை ஆவணப்படுத்தும் பகுதி என்ற ஒரு பகுதியும் உள்ளது. அந்தப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்தும் இலங்கையில் இருந்தும் வெளிவந்த பத்திரிகைகள் சேகரித்து ஆவணப்படுத்தி வைக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி வந்த பத்திரிகைகளில்
பல, யாழ் நுாலகம் எரிக்கப்பட்ட போதும், இந்திய ஆமியின் இராணுவ நடவடிக்கை மற்றும் புலிகளின் கோட்டை மீட்பு  நடவடிக்கைகளினால் எரிவடைந்தும் காணாமல் போயும் பழுதாகியும் போய்விட்டன.

இதனால் குறிப்பிட்ட சில காலப்பகுதிகளுக்கான பத்திரிகைகள் அப்பகுதியில் ஆவணப்படுத்தப்படாது இருந்துள்ளது. இதனை அவதானித்த ஓர் ஊடகவியலாளர் தற்போதும் அந்தக் காலத்தில் இருந்து செயற்படும் உதயன் பத்திரிகையின் காணாமல் போன ஆண்டுகளுக்கான பிரதியை உதயன் பத்திரிகையிடம் இருந்து நான் கேட்டு வாங்கித் தருகின்றேன் என அந் நுாலகத்தில் இருப்பவர்களிடம் கூறியிருந்தாராம்.

அதன் பின்னர் சிறிது காலத்தின் பின்னர் குறித்த ஊடகவியலாளரை அணுகிய அந்த நுாலகத்தைச் சேர்ந்தவர்கள் பிரதிகள் வாங்கித் தருவது என்னமாதிரி எனக் கேட்டுள்ளார்கள்.

அதற்கு அந்த ஊடகவியலாளர் இவ்வாறு சொன்னாராம்....

”நான் சரவணபவனிடம் இது தொடர்பாக தெரிவித்து காணாமல் போன பிரதிகளை மாத்திரிம் கொடுத்து உதவுவீர்களா? எனக் கேட்ட போது சரவணபவன் கொதியாய் கொதித்தார். அத்துடன் அது நினைத்தவுடன் கொடுக்க முடியாது. அவ்வாறு கொடுப்பதாக இருந்தாலும் சும்மா கொடுக்க முடியாது. அத்துடன் ஒவ்வொரு பிரதிக்கும் குறிப்பிடத்தக்க அளவு பணத்தை அறவிட்டு அதுவும் போட்டோக் கொப்பியைத் தான் கொடுக்கலாம். அத்துடன் அதற்கான பணமும் அறவிடப்படும். அத்துடன் அவற்றைக் கொடுப்பது தொடர்பாக நான் பலருடன் கலந்தாலோசித்துவிட்டே கொடுப்பேன் என்று சொன்னார்” என ஊடகவியலாளர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

”என்ர பேப்பர் கொம்பனி எரிக்கப்பட்டபோது யாராவது எனக்கு காசு தந்தவையோ? என்ர சொந்தக்காசுல தான் நான் எல்லா நட்டத்தையும் சரிக்கட்டினான்” எனவும் சொன்னாராம்.

இதே சரவணபவன் இன்னொரு ஊடகவியலாளருக்கு திமிருடன் சொன்ன வார்த்தைகள் இவை.

”என்ர பேப்பரை காசு இல்லாது சும்மா மற்றவர்களுக்கு படிக்க கொடுத்தாலும் எனக்கு ஒவ்வொரு பேப்பரிலும் இருந்து 60 சதம் இலாபம் வரும்”

” தமிழரசுக் கட்சியில நான் இருக்கிறன் என்டதுக்காக அவங்களுக்கு எல்லாம் நான் வாலாட்டிக் கொண்டு இருக்க முடியாது. அவங்கள்தான் என்னைக் கண்டு வாலாட்டுவாங்கள்”

” உதயன் பேப்பரின் ஆசிரிய பீடத்துக்குள் நான் தலைப் போடுவதில்லை. நான் ஏதாவது நல்லதோ, கெட்டதோ செய்தால் அவங்கள் என்னைப் பற்றியும் செய்தி போடுவாங்கள்’’
உதயன் பத்திரிகை அலுவலகத்தில்  சில முன்னாள் போராளிகளையும் சரவணபவன் வேலைக்கு அமர்த்தியுள்ளார். அது அவரது சரவணபவன் இராஜதந்திர நடவடிக்கைகளுக்கான ஒன்றாகவே இருக்கின்றது. தான் முன்னாள் போராளிகளுக்கு வேலை கொடுத்துள்ளதாக தெரிவிப்பதற்கே அவ்வாறு அவர் அமர்த்தியுள்ளார். குறித்த முன்னாள் போராளிகளுக்கும் தனது திமிர்க் கதையைத் தெரிவித்துள்ளார் சரவணபவன்.

”உங்கள் தலைவர் பிரபாகரனும் நானும் ஒரே நேரத்திலேயே போராட்டங்களைத் தொடங்கினோம். பிரபாகரன் ஆயுதத்தைத் துாக்கினார். நான் பேனாவைத் துாக்கினேன். ஆனால் அவர் அழிந்தொழிந்து போனார்” எனது பத்திரிகை இன்றும் உள்ளது என போராளிகளுக்குத் தெரிவித்திருந்தாராம்.
உதயன் பத்திரிகையை முன்னுக்கு கொண்டு வந்தவர் உதயன் பத்திரிகை ஆசிரியராக இருந்த வித்தியாதரனாவார். இவராலேயே உதயன் பத்திரிகை அந் நேரத்தில் முன்னிலையில் இருந்தது. தற்போதுள்ள ஆசிரிய பீடம் சரவணபவனுக்கு வாலாட்டும் நாயாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது உதயன் பத்திரிகையில் மரண அறிவித்தல் மாத்திரம் சூடான தகவலாக உடனுக்குடன் வந்துகொண்டு இருக்கின்றது. அத்துடன் உதயன் பத்திரிகைக்கு தற்போது வாலாட்டும் தமிழ் அரசியல்வாதிகள் அதுவும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் யாரெனில் கஜதீபனும், ஐங்கரநேசனும், இன்னும் ஓரிரு சபை உறுப்பினர்கள்தானாம். சில பிரதேசசபை உறுப்பினர்களும் உதயன் பத்திரிகைக்கு வாலாட்டுவதாகத் தெரியவருகின்றது.

நேற்று உதயன் பத்திரிகை தன்னால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களை வைத்து நாடகப் பாணியில் ஒரு நிகழ்வை நடாத்தியிருந்தது. அந்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் இராசகுமாரன் தன்னைப் பற்றி வடிவேலு பாணியில் தானே புகழ்ந்து தள்ளியுள்ளார்.

’மைத்திரியை ஜனாதிபதியாகக் கொண்டுவருவதற்கு தான் உயிரை துறக்கும் நிலையில் கூட பயப்படாது துணிவாக நின்று செயற்பட்டேன்” என தெரிவித்துள்ளாராம். 

இதுக்கு ஒரு நல்ல பகிடிக் கதை ஒன்று இருக்கின்றது. ”பெண் யானை ஒன்று நித்திரையாக இருக்கும் போது அதைக் கண்ட ஓர் ஆண் சுண்டெலி ஒன்று அந்த பெண்யானையுடன்  அந்தரங்கமாக இருந்து விட்டு யானை விழித்த பின் நான் உன்னைக் கற்பழித்துவிட்டேன் என கத்திவிட்டு ஓடியதாம்”

இவ்வாறானவர்களை எல்லாம் உதயன் பத்திரிகை வளர்த்துவிட்டு பின்னர் உசுப்பேற்றி உசுப்பேற்றி ரணகளமாக்கிய சம்பவங்கள் ஏராளம் நடந்து கொண்டிருந்தன. தற்போது உதயன் பத்திரிகையின் செல்வாக்கு சடுதியாக வீழ்ச்சியடைந்துவிட்டது.
தினமும் 20 ரூபாவை செலவளித்து உதயனை வாங்கி படிப்பதை விட ஒரு கிழமைப் பேப்பர்களை பலசரக்கு கடையில் 10 ரூபா கொடுத்து வாங்கி படிக்கலாம் என்ற நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.

பத்திரிகை அச்சடிக்கும் நிறுவனமே விற்பனை போகாமல் பழைய பேப்பர் கடைக்கு கொண்டு போய் கிலோ 10 ரூபாய் படி கொடுக்கும் நிலைமை தற்போது யாழ்ப்பாணத்தில் நிகழ்கிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும்  நாளாந்த தமிழ்ப் பத்திரிகைகளில் ஒன்றான  உதயன் பத்திரிகை தினசரி 13,000 பிரதிகளும் ஞாயிற்றுகிழமைகளில் மட்டும் 15,000 பரதிகளும் அச்சாவதாக அறியமுடிகிறது.

அப்படி அச்சாகும் பத்திரிகையின் எண்ணிக்கையை விட குறைந்தளவு பத்திரிகையே விற்பனையாவதாக தெரிய வருகிறது.இதனால் எஞ்சுவதை பலசரக்கு கடைகளுக்கு விற்கிறார்கள்.

உதயன் நிறுவனத்துக்கு  பேப்பரால் கிடைக்கும் லாபத்தை விட விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் இலாபம் தான் உச்சம் என தகவல்கள் கசிகின்றன.

இந்த பத்திரிகையின் நிர்வாக இயக்குனராக இருக்கும் ஈ.சரவணபவன் 2010 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பாக யாழ்.மாவட்டத்தில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.

இனிவரும் பொதுத் தேர்தலில் இவர் பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால் இதே தேர்தல் தொகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம் பியாகவுள்ள எம்.ஏ. சுமந்திரனும் போட்டியிடவுள்ளதாக  செய்திகள் கசிந்துள்ளது..

எவ்வாறு இருப்பினும் விரைவில் பருத்தித்துறை பகுதியில் கோஷ்டி மோதல்கள் தொடங்கும் என்பதில் ஐயமில்லை என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment