தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த
தலைவர்களில் ஒருவரான இல. கணேசன் வடக்கு மாகாண அவைத் தலைவர்
சீ.வீ.கே.சிவஞானம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின்
மூத்த தலைவர்களில் ஒருவரான இல. கணேசன் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்களை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன் போது வடக்கு மாகாணத்தின் பொருளாதார கட்டுமானங்களை மேம்படுத்தல், போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள் மற்றும் பொதுமக்களுக்கு வாழ்வாதார உதவிகளை மேம்படுத்தல் உள்ளிட விடயங்களுக்கு இந்திய அரசாங்கம் வடக்கு மாகாணத்துக்கு உதவி செய்யவேண்டும் என அவைத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்ட இல. கணேசன் இந்தியா திரும்பியதும் இந்த விடயங்கள் தொடர்பில் உரிய அமைசர்களுடன் கலந்துரையாடி நல்லதொரு பதிலை பெற்றுத் தருவதாக தெரிவித்தார்.
அண்மையில் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட தீர்மானமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் ஏனைய பகுதிகளிலும் உள்ளவர்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதற்காக பலாலி, திருகோணமலை ஆகிய இடங்களிலிருந்து இந்தியாவிற்கு விமான சேவைகளை ஆரம்பிக்க வேண்டும்.
வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக செயற்படுத்த வேண்டுமெனவும், பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களின் போக்குவரத்து வசதிகளைக் கருத்தில் கொண்டு தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிக்க வேண்டுமெனவும் என்ற தீர்மானத்தை நடைமுறைபடுத்த இந்திய அரசாங்கம் உதவி செய்யவேண்டும் வேண்டும் என்றும் அவைத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment