August 25, 2016

மன்னன் பண்டாரவன்னியனின் 213 வது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு!

வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னனும் தேசிய மாவீரனும் ஆன பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவு கோட்டையை கைப்பற்றிய நினைவு நாள் இன்று வவுனியாவில் அனுஷ்டிக்கப்பட்டது.


முல்லைத்தீவில் ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட கோட்டையை தகர்த்து வெற்றி கொண்ட நாளின் 213ஆவது ஆண்டு நினைவு நிகழ்வை பண்டாரவன்னியன் நற்பணி மன்றமும் வவுனியா நகரசபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இதன்போது பண்டாரவன்னியனுக்கு மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.

வவுனியா மாவட்ட செயலக வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் நினைவுத்தூபிக்கு முன்பாக இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர் கா.உதயராசா, வட மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், சிரேஸ்ட சட்டத்தரணி சிற்றம்பலம் உள்ளிட்ட மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.



No comments:

Post a Comment