முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களால் மேற்கொள்ளப்பட்ட காணிக் கொள்ளைக்கு இணையாக, அவரின் மனைவியும் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸை, கலைஞர்களின் கட்டட தொகுதிக்கு ஒதுக்கிய 70 பெர்சஸ் காணி மற்றும் கட்டடம் என்பனவற்றை ஷிரந்தி ராஜபக்ஷ கையப்படுத்தியுள்ளமை தற்போது தெரிய வந்துள்ளது.
குறித்த நிலப்பரப்பு, 2015ஆம் ஆண்டு 30 வருட வாடகை ஒப்பந்தத்தில் ஷிரந்தி ராஜபக்சவுக்கு சொந்தமான “கால்டன் முன்பள்ளி நிறுவனத்திற்கு” வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு கலைஞர்களால் எதிர்ப்பை வெளியிடுவதற்கு அந்த காலப்பகுதியில் சந்தர்ப்பம் காணப்படாமையினால், குறித்த காணியை மிகவும் இலகுவாக ராஜபக்ச ஆட்சியினால் இதனை கைப்பற்ற முடிந்துள்ளது.
எப்படியிருப்பினும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்த கலைஞர்கள், இந்த பிரச்சினையை தீர்க்குமாறு சமகால ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 வருட வாடகை ஒப்பந்தம் ஒன்றில் கால்டன் முன்பள்ளி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்த பத்திரத்தை மீண்டும் பெற்று, கலை சபையில் கீழ் கலைஞர்களுக்காக மத்திய நிலையம் ஒன்றை நிர்மாணித்து தருமாறு மூத்த கலைஞர்கள் கோரியுள்ளனர்.
இது தொடர்பில் நல்லதொரு தீர்வினை சமகால தேசிய அரசாங்கம் பெற்றுத் தரும் என்று நம்பிக்கையில் கலைஞர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment