மன்னாரில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் கட்டையடம்பன் பகுதியில் வைத்து சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உதயகுமாரசிங்கம் கௌசிகன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து முதலில் 723 கிராம் எடை கொண்ட ஹெரோயின் பொதி மீட்டப்பட்டது. எனினும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சிறுத்தோப்பில் அமைத்துள்ள மீன் வாடியில் பதுக்கி வைத்திருந்த மேலும் 272 கிராம் எடை கொண்ட ஹெரோயின் பொதி மீட்கப்பட்டது.
சுமார் 996 கிராம் எடை கொண்ட குறித்த ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதோடு அதன் பெறுமதி ஒரு கோடி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது 3 கிலோ 329 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சாப்பொதியும் மீட்கப்பட்டுள்ளது.
ஹெரோயின் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட குறித்த நபர் மன்னார் பேசாலை கிராமத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment