April 10, 2014

யாழ்.மாநகர சபையினில் ஈபிடிபி அடாவடி! 30 பேரின் நியமனத்தைப்பறித்தார் டக்ளஸ்!

யாழ்.மாநகர சபையில்  மிக நீண்ட காலமாக பணியாற்றிவரும் தற்காலிக ஊழியர்களில் 30 பேருக்கான நிரந்தர நியமனத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடைநிறுத்தியிருப்பதாக முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் தமிழ்த்தேசிய
பண்பாட்டுப் பேரவையின் தலைவருமான எஸ்.நிசாந்தன் தெரிவித்துள்ளார்.யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாநகர சபையின் ஆளுங்கட்சியினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். இதேவேளை நிரந்தர நியமனம் பெற தயாராகவுள்ள 30 ஊழியர்களின் நிரந்தர நியமனத்தினையே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடை நிறுத்தி வைத்துள்ளார்.அவர்களுக்கு பதிலாக தமது கட்சியின் விசுவாசிகளை அந்தப்பணிகளில் அமர்த்துவதற்கு முயற்சிப்பதாகவும் நிசாந்தன் குற்றம் சாட்டினார்.இந்நிலையினில் அப்பணியாளர்கள் நேற்று மாநகர ஆணையாளரது அலுவலகத்தினை சுற்றிவளைத்து போராட்டமொன்றினை நடத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment