May 3, 2015

நேபாளத்தில் கடந்த 25–ம் திகதி நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 7000-ஐ தாண்டியது!

நேபாளத்தில் கடந்த 25–ம் திகதி 7.9 ரிக்டர் அளவு கொண்ட கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், காத்மாண்டு, கீர்த்தி நகர் மற்றும் போக்ரா உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

நிலநடுக்கம் நடந்து ஒருவாரமாகியுள்ள நிலையில், அங்கு தொடர்ந்து இடிபாடுகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் பனிச்சரிவில் சிக்கி மரணத்தை தழுவிய வெளிநாட்டவர் உள்பட 50 பேரின் சடலங்களை மீட்பு படையினர் சனிக்கிழயைமன்று மீட்டுள்ளனர்.
ரசுவா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளில் இவர்கள் அனைவரும் சடலமாக மீட்கப்பட்டதாக துணை காவல் கண்காணிப்பாளரான ப்ரவீன் பொகாரெல் கூறியுள்ளார்.
பலியான 50 பேரை தவிர அப்பகுதியை சேர்ந்த மேலும் 200 பேர் காணாமல் போயுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே நிலநடுக்கம் காரணமாக இதுவரை 7040 பேர் உயிரிழந்துள்ளதுடன், 14123 பேர் காயமடைந்துள்ளதாக நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.Dath

No comments:

Post a Comment