யாழ். நகரில் 512வது கட்டளை மையம் அமைந்திருந்த ஞானம்ஸ் ஹோட்டலில் இருந்து
மீட்கப்பட்ட வெடிபொருட்களில் ஒருதொகுதி செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஞானம்ஸ் விருந்தினர் விடுதியின்
பின்புறத்திலிருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள் இராணுவத்தின் குண்டு
செயலிழக்கும் பொறியியல் பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்பட்டு
வெடிபொருட்களும் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இராணுவ வானகத்தில் மண்மூடைகள் அடுக்கப்பட்டு வெடிபொருட்கள்
வைக்கப்பட்டு அபாய குறிகள் மற்றும் சிவப்பு கொடிகள் வானத்தில்
கட்டப்பட்டு குறித்த வெடிபொருட்கள் கொண்டு செல்லப்பட்டன.
எனினும் படையினரின் யாழ்.நகரிற்கான கட்டளை மையம் அமைந்திருந்த பகுதியினில் இவ்வாறு வெடிபொருட்கள் எவ்வாறு இருந்ததென கேள்வி எழுந்துள்ளது.பதிவு இணைய செய்தி
இதனிடையே இராணுவத்தினர் பாரிய குண்டு அகற்றுகின்றனர் என்பது மக்களையும்
அரசாங்கத்தையும் திசைதிருப்பி கண்துடைப்பு செய்யும் நடவடிக்கையென மாநகரசபை
முன்னாள் உறுப்பினர் நிசாந்தன் தெரிவித்துள்ளார். பதிவு இணைய செய்தி
உண்மையில் இன்று வெசாக் பண்டிகை தினம் இன்று இந்த நடவடிக்கை தொடங்க பட்டதன்
காரணம் பலரது கவனமும் இங்கு இருக்காது என்பது தான் உண்மையில் விக்டோரியா
வீதியில் உள்ள வெறும் காணி ஒன்றில் முன்னர் ராணுவ கட்டுபாட்டுக்குள் இருந்த
போது ஒரு முக்கிய பதவியில் இருந்த ராணுவ வீரர் பதுக்கி வைத்திருந்த 14
கிலோ தங்கம் கட்டிகள் இருப்பது தெரிய வந்தது தான் காரணம் இதை அரசுக்கும்
மக்களுக்கும் தெரியாமல் தற்போது உள்ள ராணுவ அதிகாரிகள் அமுக்குவதற்காகவே
இந்த நாடகம். இதற்;கு எம்மவர்கள் இருவரும் உடந்தையெனவும் யாழ்ப்பாண
மாவட்டத்துக்குள் இருக்கும் வங்கி ஒன்றின் தங்கம் என அறிய முடிகின்றதெனவும்
தெரிவித்துள்ளார்..
பதி
எனினும் படையினரின் யாழ்.நகரிற்கான கட்டளை மையம் அமைந்திருந்த பகுதியினில் இவ்வாறு வெடிபொருட்கள் எவ்வாறு இருந்ததென கேள்வி எழுந்துள்ளது.பதிவு இணைய செய்தி
பதி
No comments:
Post a Comment