எவன் காட் மோசடி தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 போரையும் எதிர்வரும் 30ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலாபிட்டிய இன்று நோடீஸ் அனுப்பியுள்ளார்.
எவன் காட் நிறுவனத்துடன் இணைந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட எட்டுப்பேர் அரசுக்கு 1140 கோடி நட்டம் ஏற்படுயத்தியதாகத் தெரிவித்து நேற்று இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு அமையவே இந்த நோடீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் கோட்டாபய ராஜபக்ஷவுடன், நிஸங்க யாப்பா சேனாதிபதி, முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரால் ஜயனாத் கொழம்பகே, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் சுஜாதா தமயந்தி ஜெயரத்ன, மேஜர் ஜெனரல் பாலித பியசிறி பிரணாந்து, மேஜர் ஜெனரல் கருணாரத்ன ஏகொடவெல மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரால் ஜயந்த பெரேரா ஆகியோரே இணைக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment