September 1, 2016

வெளிநாட்டு நீதிபதிகளை அனைத்துலக சமூகம் இனி வலியுறுத்தாது!

வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் நம்பகமான விசாரணையை நடத்த வேண்டும் என்று, ஐ.நாவோ, ஐரோப்பிய ஒன்றியமோ ஏனைய உலக அமைப்புகளோ, அனைத்துலக சமூகமோ இனிமேல் வலியுறுத்தாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.


கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன,

மகிந்த ராஜபக்ச அதிகாரத்தில் இருந்திருந்தால், போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்துலக விசாரணையை நடத்த வேண்டும் என்று அனைத்துலக சமூகம் கழுத்தை பிடித்து நெரித்திருக்கும்.

தற்போதைய அரசாங்கம் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, நீதிச் சுதந்திரம் ஆகியனவற்றை மாத்திரம் மீளமைக்கவில்லை. சிறிலங்காவின் கௌரவம், மதிப்பையும் மீளமைத்திருக்கிறது.

தீண்டத்தகாத அரசு என்ற உலக சமூகத்தினால் முத்திரை குத்தப்படும் நிலையில் இருந்த சிறிலங்காவுக்கு சுயமரியாதையை பெற்றுக் கொடுத்திருக்கிறது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment