June 4, 2016

கேள்விகேட்ட ஊடகவியலாளரிற்கு உயிர் அச்சுறுத்தல்!

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிசங்க சேனாதிபதி அண்மையில் பொலிஸ் நிதி மோசடி பிரிவின் முன்னாள் வாக்குமூலமொன்றை பதிவுச் செய்வதற்காக ஆஜராகினார்.


அச்சமயம் ஊடகவியலாளர்கள் அவரிடம் தொடர்ச்சியாக கேள்வி கணைகளை தொடுத்தார்கள்.

அச்சந்தர்பத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் அவ்விடத்திற்கு வருகை தந்த ஒரு நபர் மிகவும் இரகசியமான முறையில் நிசந்த சேனாதிபதியிடம் கேள்வியெழுப்பிய ஊடகவியலாளரை புகைப்படம் எடுத்ததை இக்காணொலியில் காணலாம்.

அந்நபர் கறுப்பு நிற வாகனமொன்றின் பின்னால் மறைந்திருந்தே இப்புகைபடத்தை எடுத்தார். ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்ட நிசங்க சேனாதிபதி இவ்வாகனத்திலே புறப்பட்டுச் சென்றார்.

இவ்வாறு கேள்விகளைக் கேட்ட அவ் ஊடகவியலாளருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.





No comments:

Post a Comment