June 14, 2015

யாழ்ப்பாணம் உரும்பிராய்ப் பகுதியில் மனைவியின் தங்கையான 18 வயது மாணவியுடன் கணவன் தலைமறைவு – வாள்களுடன் தேடும் சகோதரர்கள் !

யாழ்ப்பாணம் உரும்பிராய்ப் பகுதியில் 18 வயதான மாணவியுடன் குடும்பஸ்தர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார். 40 வயதான இவர் திருமணம் முடித்து 4 பிள்ளைகளுக்கு தகப்பன் என்பதும் மனைவியின் தங்கையுடனேயே இவர் தலைமறைவாகியதாகவும் தெரியவருகின்றது.

குறித்த மாணவி படிப்பில் மிகுந்த திறமையானவர் என்பதும்  மாணவியின் சமூகத்தவர்களில் குறித்த மாணவியே புலமைப் பரிசில்பரீட்சையில் சித்தியடைந்ததுடன்  க.பொ.த சா.த 7 பாடங்களில் ஏ சித்தியும் பெற்றிருந்தார் என மாணவியின் உறவினர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
மாணவியுடன் தலைமறைவானவர்  வாகனச்சாரதி எனவும்  மனைவியை விட 16 வயது கூடிய இவர் தனது மனைவியை  மனைவிக்கு 15 வயதாக உள்ள போதே கர்ப்பமாக்கி அதன் பின்னரே திருமணம் செய்துள்ளார்.
வன்னியில் கடும் யுத்தம் நடைபெற்ற போது பெற்றோர் மற்றம் சகோதரங்களை வன்னியில் விட்டுவிட்டு யாழ்ப்பாணத்தில் தனித்திருந்த குறித்த நபருக்கு தங்குவதற்கு இடம் கொடுத்த வீட்டிலேயே இவர் தனது வித்தையைக் காட்டியுள்ளார்.
தற்போது மனைவியின் சகோதரர்களும் உறவினர்களும் குடும்பஸ்தரையும் மாணவியையும் தேடிக் கொண்டு திரிவதாகவும் குடும்பஸ்தரைக் கொல்வதற்காக சகோதரர்கள் முயன்று வருவதாகவும் ஆட்டோக்களில் வாள்களைக் கொண்டு அவர்கள் தேடுவதாகவும் தெரியவருகின்றது.
குடும்பஸ்தரின் சகோதரியின் வீட்டிற்குச் சென்ற  மாணவியின் சகோதரர்கள் அங்கு பெரும் அட்டகாசம் செய்த போது பொலிசாருக்கு தெரியப்படுத்தவே அப்பகுதிக்கு பொலிசார் சென்ற போது அவர்கள் தலை மறைவாகியுள்ளனர்.


No comments:

Post a Comment