முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறக்குவதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நான்கு பங்காளிக் கட்சிகள் இணைந்து
எதிர்வரும் வியாழக்கிழமையன்று புதிய கூட்டணியொன்றை உருவாக்கவுள்ளதாக தெரியவருகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி, மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமய, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய நான்கு பங்காளிக் கட்சிகளும் இணைந்தே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.
தினேஸ் குணவர்தன எம்.பி தலைமையில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனையின் பிரகாரம், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்குவதற்கான மக்கள் கூட்டங்களை நடத்தும் ஏற்பாடுகளை இந்த கட்சிகள் ஏற்கெனவே முன்னெடுத்துவிட்டன என்று தெரிவிக்கப்படுகின்றது.
சிலவேளை, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராகக் களமிறக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணங்கவில்லையாயின், புதிய கட்சியொன்றின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிட இக்கட்சிகள் தீர்மானித்துள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment