தான் வளர்த்த பூனைக்குட்டிகளில் ஒன்றை சகோதரி பிடித்து உறவினருக்கு கொடுத்தமையால் மனமுடைந்த நிலையில் வயோதிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் யாழ்ப்பாணம் சுன்னாகம் கந்தரோடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தனால் தனது செல்லப்பிராணிக்காக தற்கோலை செய்து கொண்டவர் கந்தையா சண்முகலிங்கம் என்ற 80 வயதுடைய வயோதிபராவார்.
திருமணம் செய்யாத இவர் சகோதரியுடன் வாழந்து வந்துள்ளார். இவர் வளர்த்த பூனைக்குட்டியை பிடித்துக்கொடுத்தமை தொடர்பாக சகோதரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் பின்னர் வீட்டை விட்டுப் புறப்பட்டவர் வீடு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இவரைக் காணாது தேடியவர்கள் அயலில் உள்ள வயல் வெளியில் மருந்து அருந்தி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த வயோதிபரின் சடலம் தெல்லிப்பளை ஆதாரவைத்தியசாலைக்கு ஏடுத்துவரப்பட்டு பின்னர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் மல்லாகம் நீதிமன்ற நீதிபதியினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment