January 16, 2015

ஈபிடிபியின் மண்கொள்ளைக்கு எதிரான நாகர்கோவில் போராட்டம்!!

காண்டீபன் தலைமையில் இடம்பெற்ற ஈபிடிபியின் மண்கொள்ளைக்கு எதிரான நாகர்கோவில் போராட்டம்
ஈபிடிபியினரின் மகேஸ்வரி நிதியம் மூலமான மண்கொள்ளை மக்கள் போராட்டத்தினால் முடியடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக இடம்பெற்று வந்த மண்கொள்ளைக்கு எதிராக பல தடவைகள் அம்மக்கள் போராட்டங்களை நடாத்தியுள்ளனர்.
அதேபோன்றதொரு போராட்டம் இன்று நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்றது. அப்போராட்டத்திற்கு தங்கராஜா காண்டீபன் தலைமை தாங்கியருந்தார். மேற்படி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொண்டிருந்தனர். பொது மக்களது எதிர்ப்பையும் மீறி ஈபிடிபி மண்கொள்ளைக்காரர்கள் மண்ஏற்ற முற்பட்டபோது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இணைந்து மிகக் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். நிலைமை கட்டுமீறச் செல்வதனை அறிந்த பொலீசார் உடனடியாக இந்த வந்த்திற்கு வந்தனர். பொதுமக்கள் ஆத்திரமடைந்துள்ள காரணத்தினாலும் சட்டபூர்வ அனுதியின்றி சட்டத்திற்கு விரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபடுவதனாலும் உடனடியாக மணஒ; அகழ்வை நிறுத்த வேண்டும் என ஈபிடிபி யினருக்கு பொலீசார் உத்தரவிட்டனர். ஈபிடிபியினர் மக்களை மிரட்டி தமது மண்கொள்ளைக்கு மக்களாதரவு உள்ளபோன்று காட்ட முற்பட்டனர் எனினும் மக்கள் மசிந்து கொடுக்காத நிலையில் டிப்பர்களில் ஏற்றப்பட்டிருந்த மண்ணை மீண்டும் அவ்விடத்திலேயே கொட்டிவிட்டு வெளியேறினர். எனினும் இந்த ஈபிடிபி அமைப்பினர் தம்மை வாகனங்களால் மோதிக் கொலை செய்துவிடுவார்களோ என்ற அச்சத்துடனேயே தாம் செல்வதாக மக்கள் கூறிச் சென்றதை கேட்க முடிந்தது.








No comments:

Post a Comment