நடந்து திரிந்து, படுத்துறங்கி கடலிலே நீந்தி விளையாடி....
முதன்முதலாக வல்வெட்டித்துறை கடற்பரப்பிலே கரும்புலித் தாக்குதல் மூலம் சிங்களக் கடற்படையின் களங்களை மூழ்கடித்த கடற்கரும்புலிகளான மேஜர் காந்தரூபன், கப்டன் வினோத் மற்றும் கப்டன் கொலின்ஸ் ஆகியோர்
கடற்கரும்புலித் தாக்குதலை மேற்கொள்ள புறப்பட்டுச் சென்ற இடம்தான் இந்த ரேவடிக் கடற்கரை.
அது மட்டுமல்லாமல் பல போராளிகளையும், தமிழ் இளைஞர்களையும் ஈழத்திலிருந்து தமிழகத்திற்கும் பின் மணலாற்றுக் காடுகளுக்குள்ளும் பயிற்சிகளுக்காகவும், பணிகளுக்காகவும் படகுகளில் அனுப்பி வைத்த வீர வரலாறும் இந்த "ரேவடிக் கடற்கரைக்கு" உண்டு!
ஆரம்ப காலங்களில் தேசியத் தலைவர் முதல் பல தளபதிகள் வரை கால் பதித்து உலாவிய இடமும் கூட.... இவைகள் மட்டுமல்லாமல் தமிழீழ போராட்ட வரலாற்றில் பல பல வரலாற்றுத் தடயங்களை தனக்குள்ளே புதைத்து வைத்திருக்கும் வீரம் செறிந்த கடற்கரையும் இதுவே!!!
இந்த கடற்கரையில்தான் ஒவ்வொரு வருடமும் தைத்திருநாள் அன்று வல்வை மக்களினால் பட்டம் பறக்கவிடும போட்டியான "பட்டத் திருவிழா" நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
அந்த வேளையிலே வல்வை இளைஞர்கள் விதவிதமான பட்டங்களாக கனரக வாகனங்கள், கப்பல்கள், வீடுகள், பறவைகள், மிருகங்கள், தாஜ்மஹால் போன்ற நினைவுச் சின்னங்கள் மற்றும் பாம்புகள் இன்னும் பல வடிவங்களை பட்டங்களாக உருவாக்கி வல்வை வானத்தில் பறக்க விட்டு.... வானத்தில் புதியதொரு உலகையே உருவாக்கி அழகாக்கி விடுவார்கள்.
பல ஊர்களிலிருந்தும் மக்கள் வருகை தந்து இந்தப் பட்டத் திருவிழாவை பார்த்து மகிழ்வதோடு... கலந்து சிறப்பித்தும் செல்வார்கள்.
இறுதியில் சிறந்த பட்டத்திற்கான பரிசில்களும் பெரியோர்களால் வழங்கப்படும்.
இந்தக் காட்சிகள் தைப்பொங்கல் தினமான 15.01.2015 அன்று பட்டத் திருவிழாவின் போது எடுக்கப்பட்ட படங்களே இவை.
No comments:
Post a Comment