January 16, 2015

கோதாபயவின் ஆயுதக் கொடுக்கல் வாங்கல்கள் அம்பலம்!

கோதாபய ராஜபக்ஷவினால் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட ஆயுத வியாபாரம் தொடர்பாக இப்போது அம்பலமாகியுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இந் நாட்டிற்கு வரும் வியாபாரக் கப்பல்களில் பாதுகாப்பிற்காக எடுத்துவரப்படும் அதிசக்திவாய்ந்த கப்பல் ஆயுதங்களை இலங்கை கடல் எல்லைக்குள் உட்பிரவேசிக்கும் போது இலங்கை கடற்படையினரின் பொறுப்பில் களஞ்சியப்படுத்தப்படும்.அப்போது அவ் ஆயுதங்களின் அளவிற்கு மற்றும் ஆயுதங்களை களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் காலத்திற்கே...ற்ப அதற்குரிய பணக்கொடுப்பனவு உரியா கப்பல் நிறுவனத்தின் மூலம் வழங்கப்படுகின்றது.இதுவரை இச்செயலை காலி கடற்படை முகாம் பொறுப்பேற்று செய்துள்ளது.அத்தோடு கோடிக்கணக்கான வருமானம் கடற்படையினருக்கு சேர்ந்துள்ளது.


இருந்தபோதும் முன்னால் பாதுகாப்புச் செயலாளரினால் ‘டக் (Tug)மஹநுவர’ எனும் தனியார் tugboat இனைப் பயன்படுத்தி அதற்குள் இடையிலே குறுக்கீடு செய்து இலங்கைக்கு வருகை தரும் கப்பல்களில் உள்ள ஆயுதங்களை இவ் tugboatஇல் களஞ்சியப்படுத்துவது மற்றும் கடற்படையினரினால் அதற்குப் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதுடன் அதன் மூலம் அரசாங்கத்திற்குக் கிடைக்க வேண்டிய பெரும் தொகையான பணத்தை கோதாபய ராஜபக்ஷ சூறையாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலித் துறைமுகத்திலே இவ் ஆயுதங்களை களஞ்சியப்படுத்துவதற்கு பாரிய கட்டிடம் ஒன்றும் கடற்படையினரால் அமைக்கப்பட்டுள்ளதுடன், அதனைத் திறந்து வைக்க முன்னர் இவ்வாறான தனியார் கப்பல்களைப் பயன்படுத்தி அதற்கு ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியொருவரை நியமித்து கடலிலிருந்தே அனைத்து கொடுக்கல்வாங்கல்களையும் மேற்கொண்டு நாட்டிற்கு கிடைக்கவேண்டிய பெரும்தொகைப் பணத்தை கொள்ளையடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment