January 16, 2015

டக்ளஸினது மணல் வியாபாரமும் போனது!

யாழ்.வடமராட்சி கிழக்கில் மகேஸ்வரி நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டுவந்த மணல் அகழ்வுக்கு
பயன்படுத்தப்பட்ட அனுமதிப்பத்திரம் முறையற்றவகையில் பெறப்பட்டுள்ளதாக மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டையடுத்து குறித்த பகுதியில் மணல் அகழ்வதற்கும், அகழப்பட்ட மணலை அள்ளுவதற்கும் காவல்துறை இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
குடத்தனை, அம்பன், நாகர்கோவில் பகுதிகளில் ஈ.பி.டி.பி அமைப்பினால் மகேஸ்வரி நிதியத்தினால் கடந்த சில வருடங்களாக சட்டத்திற்கு மாறான வகையிலும், வழங்கப்பட்ட நியமங்களை மீறியும் மணல் அகழப்பட்டுவந்ததாக மக்கள் மற்றும் அரசியல் தரப்புக்களால் குற் ற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் அம்பன் பகுதியில்,தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி இணைந்து வடமராட்சி கிழக்கி ல் சட்டத்திற்கு மாறான வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வினை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி அப்பகுதி மக்கள் மற்றும் உழவு இயந்திர உரிமையாளர்களுடன் இணைந்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றிணை நடத்தியிருந்தனர்.
அப்போது அப்பகுதி மக்கள் மேற்படி இரு கட்சிகளிடமும் பலவிதமான முறைப்பாடுகளை முன் வைத்தனர். அதாவது எங்கள் பகுதியிலிருந்து பெருமளவு மணல் தினசரி எடுத்துச் செல்லப்படுகின்றது. ஆனால் எங்கள் பகுதியில் முறையான வீதியில்லை. எமக்கு முறையான வாழ்வாதாரம் இல்லை. இவை எல்லவற்றுக்கும் மேலாக குடத்தனையில் தொடங்கி தற்போது நாகர்கோவில் வரையில் மணல் அகழ்ந்திருக்கிறார்கள். அது போதாதென்று நாகர் கோவில் பகுதியில் எங்கள் மயானங்களையும் அழிக்கும் வகையில் மணல் அகழ்வதுடன், கடல் மட்டத்திற்கு கீழாக மணல் அகழ்வதனால் தண்ணீர் எங்கள் குடிமனைகளுக்குள் நுழைகின்றது. இதனால் மழை காலத்தில் நாங்கள் நெஞ்சு மட்டத்திற்கு தண்ணீருக்குள், நடந்துசெல்லவேண்டிய நிலையும் உருவாகின்றது. இந்த விடயத்தில் தங்கள் பகுதியான மருதங்கேணி பிரதேச செயலர் அக்கறையற்றிருப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த தமிழ்தேசிய கூட்டமைப்பினர் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் இணைந்து மருதங்கேணி பிரதேச செயலரை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது அந்தப் பகுதியில் மணல் சட்ட த்திற்கு மாறான வகையிலேயே அகழப்படுவதாகவும், அதற்கான அனுமதியினை தாம் வழங்காத நிலையில் அமைச்சர்கள் மட்டத்தில் அந்த அனுமதியினைப் பெற்று குறித்த மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் வெளிப்படையாக குற்றம்சாட்டினார்.
பின்னர் மேற்படி இரு கட்சிகளின் பிரதிநிதிகளும் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு மீண்டும் வந்து பிரதேச செயலர் கூறிய விடயங்களையும், அடுத்தகட்ட நடவடிக்கைகள்,குறித்தும் மக்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் திடீரென அப்பகுதிக்குள் வந்த மகேஸ்வரி நிதியத்தினர் உழவு இயந்திரங்களை வீதியை விட்டு அகற்றுங்கள் நாங்கள் மணல் அகழ்வதற்கான கனரக வாகனங்களை உள்ளே கொண்டுசெல்லப்போவதாக சத்தமிட்டனர். இதனையடுத்து மக்களும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்து,உழவு இயந்திரங்களை வீதியை விட்டு அகற்றவோ, கனரக வானங்களை உள்ளே விடவோ அ னுமதிக்கப்போவதில்லையென கூறிய நிலையில் மகேஸ்வரி நிதியத்தினர் தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தகாத வார்த்தைகளால் பேசினர்.மேலும் எங்களிடம் அனுமதிப்பத்திரம் உள்ளது. நாங்கள் காவல்துறைக்கு விடயத்தை தெரியப்படுத்தியிருக்கிறோம். அதனால் எங்கள் பகுதியிலிருந்து உடனடியாக விலகிச் செல்லுங்கள் என கடும்தொனியில் கூறினர்.
இதனையடுத்து கூட்டமைப்பினர் உடனடியாக விடயத்தை காவல்துறைக்கு தெரியப்படுத்தியதையடுத்து அப்பகுதிக்கு பருத்தித்துறை காவல்துறையினர் உடனடியாக வருகைதந்தனர்.
மேலும் குறித்த எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற பகுதிக்குள் நுழையும் போதே மகேஸ்வரி நிதியத்தை இந்தப் பகுதிக்குள் நுழையவேண்டாம். என கூறினேனே! என கூறிக்கொண்டு வந்து மகேஸ்வரி நிதியத்தினருடன் பேசிய காவல்துறை அதிகாரி இவ்வளவு காலமும் மணல் அகழ்விற்கு நீங்கள் பயன்படுத்திய,

அனுமதிப்பத்திரம் முறையற்ற வகையில் பெறப்பட்டதென முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. அந்தவகையில் நாங்கள் ஜனாதிபதி செயலகம் மற்றும் அரசாங்க அதிபர், பிரதேச செயலர் ஆகி யோருடன் பேசியதன் அடிப்படையில் இந்தப் பகுதியில் மணல் அகழ்வதற்கும். அகழ்ந்த மணலை அள்ளுவதற்கும் நாம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கிறோமெனவும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment