August 3, 2016

படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதிகளுக்கு நீதி வழங்குமாறு போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை  விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி எதிர்வரும் 8ஆம்  திகதி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீலங்கா இராணுவத்தினாலும், சிறைச்சாலை அதிகாரிகளாலும் கொடூர சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு  படுகொலை செய்யப்பட்ட கணேசன் நிமலரூபன் உயிரிழந்த  4 ஆவது வருட நிறைவை முன்னிட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த போராட்டம்  அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு –  வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு  முன்பாக இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் தெரிவித்தார்.

போராட்டத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறும், சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு  படுகொலை செய்யப்பட்ட  தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி வழங்குமாறும் வலியுறுத்தவுள்ளதாகவும் அருட்தந்தை  கூறினார்.

எனினும்  அன்றைய தினம் வடக்கு, கிழக்கு  மாகாணங்களிலும் தமிழ் அரசியல் கைதிகளை  விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி  போராட்டங்கள் இடம்பெறவுள்ளதாக அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல்  தெரிவித்தார்.

No comments:

Post a Comment